செவ்வாய் கிழமை விரதம்:
கார்த்திகை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள்... ’ வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை’.. முருகனின் துணை உண்டு வாழ்வில் எந்த குறையும் இல்லை... உங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது... எதிரிகள் சூழ்ந்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்து செல்வதற்கு பாதை இல்லை.. என்று கலங்கி நிற்கும் ஒவ்வொருவருக்கும், ஒரே பரிகாரமாக சொல்வது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும், கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லலாம்... அப்படி முடியாதவர்கள் வீட்டில் இருக்கின்ற பூஜை அறையில் முருகனின் சன்னதிக்கு முன்பாக விளக்கு ஏற்றி மனதார சங்கடங்களை தீர்க்கும் முருகா என்னுடைய வாழ்வில் ஒளி ஏற்ற வா என்று அழைக்கலாம்... அப்படி செய்தால், கார்த்திகை முடிவதற்குள் நல்ல செய்தியை முருகன் உங்கள் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்...
புதன் கிழமை விரதம்:
அதேபோல குழந்தைக்கு சரியாக பேச்சு வரவில்லை... மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனம் இல்லை என்று கூறுபவர்கள்... புதன் கிழமை தோறும் ஸ்ரீ மகா விஷ்ணுவின் பாதத்தில் உங்களுடைய குழந்தைகளை சரணாகதி அடையச் செய்யுங்கள். குறிப்பாக மதிப்பெண் வாங்க ஆசைப்படுபவர்கள் எவ்வளவு படித்தும் வார்த்தைகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்களுக்கு கார்த்திகை மாதம் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு வரப்பிரசாதம்.... அன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வீட்டின் பூஜை அறையில் வைத்திருக்கக் கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி மனதார அவரை பிரார்த்தனை செய்யலாம்... அப்படி செய்தால் படிப்பு தொடர்பான பிரச்சனைகள் விலகும், புத்தி கூர்மை அதிகரிக்கும் பாட புத்தகத்தில் மாணவர்களின் கவனம் செல்லும், விளையாட்டுத்தனமாக இருப்பவர்கள் கூட முந்தி அடித்துக்கொண்டு மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு....
வெள்ளிக்கிழமை விரதம்:
பணம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது வீட்டில் பொருளாதாரம் வசதி குறைவு... பணமே தங்கவில்லை என்று ஏங்கித் தவிக்கும் அன்பார்ந்த வாசகர்களே . ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்களுக்கான நாள்... கார்த்திகை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் பாதத்தில் விளக்கு ஏற்றி அவரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், கார்த்திகை முடிவதற்குள் வீட்டில் பணம் புழங்கும் வங்கியில் சேமிப்பு உயரும்... வாழ்க்கை செல்வ செழிப்போடு வளரும்...
சனிக்கிழமை விரதம்:
நோய் தொற்று அதிகமாக இருக்கிறது.... அதேபோல மரண பயம் என்னை தொடர்கிறது என்று யாருக்கெல்லாம் தோன்றுகிறது... சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சர்ப்பங்களை வழிபட்டு வர வேண்டும்...உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அனைத்து தொந்தரவிலிருந்தும் நீங்கள் விடுபடலாம் சனிக்கிழமை தோறும் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ராகு, கேதுகளுக்கு கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும் அப்படி செய்தால் மரண பயம் உங்களை விட்டு விலகும்...
வாருங்கள் அன்பர்களே சிறப்பு வாய்ந்த கார்த்திகையை கொண்டாடுவோம் தெய்வ அருள் பெருவோம்...