Vastu Tips At Home: வீடு, கோயில் கட்டுவதற்கு சில வழிமுறைகளை வாஸ்து சாஸ்திரம் சொல்வதாக கூறப்படுகிறது. வாழும் இடத்தில் தீயவை நடக்காமல் இருக்கவும் நன்மைகள் பெருகவும் வாஸ்து சாஸ்திரம் பயன்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வீட்டில் கெட்ட எண்ணங்கள் விலகிட, வீட்டு பூஜையறை அல்லது வீடுகளிலேயே சிறியதாக கோயில்கள் வைத்து வழிபடுவதற்கான வாஸ்து டிப்ஸ் காணலாம். 


இதையெல்லாம் கவனிங்க..



  • குடும்பத்தில் உயிரிழந்தவர்கள், முன்னோர்கள் அவர்களின் உருவப்படங்களை கோயில் / பூஜை அறைக்கு அருகில் வைக்க வேண்டாம். அப்படி இருந்தால் வேறு இடத்திற்கு மாற்றிவிடுங்கள். ஏனெனில், தெய்வங்களுக்கு அருகில் அவர்கள் படங்களை வைப்பது தெய்வங்களை சிறுமைப்படுத்தும் விதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் படங்களை தெற்கு பார்த்தாற்போல வைக்கவும்.

  • கோயில் / பூஜை அறை எதுவாக இருந்தாலும் பழைய மத புத்தகங்களை அங்கே வைக்க வேண்டாம். அதோடு, காய்ந்த மலர்களை உடனடியாக அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் நெகடிவ் எனர்ஜி தங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. 

  • வாஸ்து சாஸ்திரம்படி வீடுகளில் சங்கு இருப்பது நல்லது. ஆனால், ஒன்றிற்கு மேல் வைக்க வேண்டாம். பூஜை செய்யப்பட்ட சங்கை வைத்து வழிபடலாம். 

  • சனி கடவுளின் படம் அல்லது சிலையை வீட்டில் வைக்கக்கூடாது. இது நெகட்டிவ் ஆற்றலை அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. 

  • உடைந்த சிலைகள், கடவுள் உருவப்படங்களை வைத்து வழிபட கூடாது. 

  • பூஜை செய்யும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். மீதமானவற்றை அங்கேயே வைக்காமல் ஒரு ஓரமாக வைக்க வேண்டும். 

  • இதையெல்லாம் செய்தால் நேர்மறையான எண்ணங்கள் சூழ்ந்திருக்கும். 


நம் வாழ்வில் வெற்றியை பெற, நல்ல ஆரோக்கியமான உடல் நலன் வேண்டும். அந்த உடல்நலனையும், வெற்றியையும் பெற நம் சுற்றம் பாசிட்டிவ் எனர்ஜிகளுடன் இருக்க வேண்டும். வீடு முழுவதும் தடையின்றி ஆற்றல் பாய வேண்டும். இவற்றிற்கு உதவுவதுதான் வாஸ்து. குறிப்பாக நாம் குடும்பமாக கூடும் இடம் என்பது ஹால் ஆகும். அவற்றை பற்றி தெளிவாக தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதில் ஃபர்னிச்சர்கள் வைப்பதற்கும், வாசல் கதவு வைகும் திசைகள் அறிவதற்கும், ஃபர்னிச்சர்கள் போன்றவற்றை தேர்வு செய்யவும், அலங்கரிக்கவும் வாஸ்து கொள்கைகளைப் பயன்படுத்தலாம். இதற்காக சிலர் வாஸ்து நிபுணர்களை அழைத்து வந்து சரி செய்வது உண்டு. ஆனால் அவற்றில் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். நாமே நமது ஹாலை வாஸ்துவுடன் அலங்கரித்து நிம்மதியாக வாழலாம்.


ஹாலை எப்போதும் நேர்த்தியாக வைத்திருங்கள். கூடுதல் ஃபர்னிச்சர் மற்றும் தேவையற்ற பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும். துக்கம் அல்லது விரக்தியை சித்தரிக்கும் கலைப்படைப்புகள் அல்லது அலங்காரங்களை ஒருபோதும் ஹாலில் வைக்க வேண்டாம். உடைந்த கண்ணாடிகள் மற்றும் செயல்படாத மின்சாதனங்கள் போன்ற பொருட்களை அகற்ற வேண்டும். வாஸ்துபடி அவை துரதிர்ஷ்டத்தையும் எதிர்மறை ஆற்றலையும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. அல்லிச்செடி, மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் போன்ற காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களால் ஹால் பகுதியை அலங்கரிக்கவும்.


வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகளை வீட்டில் வைத்து பராமரிப்பது நிறைவான நலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்றவாறு பீஸ் லில்லி, கற்றாழை உள்ளிட்டவற்றை வீட்டில் வைக்கலாம்.