அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில், படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது எனபதைப் பார்க்கலாம்.


அயலான்


இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அயலான். சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத், கருணாகரன் , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


அயலான் கதை


கொடைக்கானலின் பூம்பாறை கிராமத்தில் புல், பூண்டு, பூச்சிக்கும் கேடு விளைவிக்காமல் இயற்கை ஆர்வலராக, பிழைக்கத் தெரியாத நபராக விவசாயம் செய்தபடி வலம் வரும் சிவகார்த்திகேயன், தன் அம்மாவின் கவலைக்கு மனமிறங்கி சென்னைக்கு சம்பாதிக்க வருகிறார்.


மற்றொருபுறம் பூமியின் அடுத்த தசாப்தத்தை ஆளப்போகும் எரிவாயு எனக்கூறப்படும்,  நோவா கேஸ், ஸ்பார்க் எனும் கனிமத்தை பூமியின் பல அடி ஆழத்துக்கு துளை போட்டு எடுக்க சென்னையைச் சேர்ந்த வில்லன் ஆர்யன் மற்றும் அவரது பெருநிறுவனம் சார்பில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு இடையே, மனிதர்களுடன் சண்டை போட்டு பூமியை அழிக்க வரும் ஹாலிவுட் பட ஏலியன்களுக்கு மாறாக, பூமியை வில்லன்கள் குழுவிடமிருந்து காப்பாற்ற  “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து பூமிக்கு வருகை தருகிறது படத்தின் ”ஹீரோ” ஏலியன் டாட்டூ.


அயலான் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்... குறிப்பாக அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறைந்த செலவில் இதுவரை தமிழில் வெளிவராத தரத்தில் அயலான் படத்தின் காட்சிகள் அமைந்திருப்பதாக ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா படத்தை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


அயலான் முதல் நாள் வசூல்


அயலான் படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 3.2 கோடி வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அயலான் படம் ரூ 4.35 கோடியும் மூன்றாவது நாளாக 5.59 கோடியும் வசூல் செய்துள்ளது. இன்றுடன் ஐந்தாவது நாளாக நிறைவு செய்யும் அயலான் 2.59 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் நான்கு நாட்களில் அயலான் படம் 15.73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அயலான் பொங்கல் கொண்டாடும் சிவகார்த்திகேயன்






அயலான் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடம் கூடவே டாட்டூ ஏலியன் உருவத்துடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு அயலான் பொங்கல் கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.