நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இன்று மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அது உங்கள் மன அழுத்தத்திற்கு மருந்தாக அமையும். தாமதங்களை தவிர்க்க இன்றைய நாளை நன்றாக திட்டமிடுங்கள்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் மகிழ்ச்சியாக நேர்மைறை ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் இருப்பதைக் கொண்டு இன்னும் மகிழ்வாக இருக்க முடியும். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அதிக அளவில் செலவுகள் காணப்படும். நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நேர்மறை அணுகுமுறை தேவை.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து கனவு காண்பீர்கள். இன்று மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சேமிப்பு திறன் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு திட்டமிடுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள்; கூட உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும்.எனவே, பணிகளை திட்டமிட்டு அதன்படி செயலாற்றுவது உங்களுக்கு நல்லது.தியானம் மேற்கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அதிக செலவினங்கள் காணப்படும். பணியில் உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு அதிகமாகக் காணப்படும். நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் நேர்மையாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். யோகா முறையாக மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதிக அளவில் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிறைந்த மகிழ்ச்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மன அழுத்தங்களை குறைக்கலாம். நேர்மறையான எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும். தியானம் மூலமாகவும் அமைதி கிட்டும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் வேலையில் உண்டான பதற்றத்தை உங்கள் துணையிடம் காட்டாதீர்கள். அவ்வாறு இருப்பது உறவுக்கு நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பை அளிக்கும். கூடுதல் சேமிப்பிற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுவீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்