நாள்: 16.05.2022


நல்ல நேரம் :


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை





கௌரி நல்ல நேரம் :




காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


சூலம் – கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று வெற்றிகரமான நாள் என்பதால் இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் அதிகமாக காணப்படும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். இன்றைய முக்கியமான நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். அதன் மூலம் பிரச்சினைகள் தீரலாம்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இன்று அது உங்களுக்கு மிகவும் கடினம்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தைரியமான போக்கின் காரணமாக சிறப்பாக உணர்வீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை உணர நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று யதார்த்த அணுகுமுறை மற்றும் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல பலனைக் காணலாம்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, தொடர் முயற்சியின் மூலம் இன்று அனைத்திலும் வெற்றி காணலாம். நேர்மறையான எண்ணங்களை பராமரிப்பதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தைக் காணலாம்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, உங்களுக்கு பயன் தரும் வகையிலான சரியான முடிவுகளை இன்று உங்களால் எடுக்க இயலும். இன்று நன்மைகள் நடைபெறும் நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்று தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பது நல்லது


மீனம்:


மீன ராசி நேயர்களே, உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை உணர்வுகள் உங்களுக்கு கவலையையும் குழப்பத்தையும் உருவாக்கும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண