இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்தபோட்டிதான் இலங்கை அணியின் அனுபவ வீரர் சுரங்கா லக்மலின் கடைசி கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.




இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அவரை 2ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் லக்மாலுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  






35 வயதான சுரங்க லக்மால் 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 171 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




அதிகபட்சமாக ஒரே டெஸ்டில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 86 ஒருநாள் போட்டிகளில் ஆடி 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 11 டி20 போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சுரங்கா லக்மாலின் ஓய்வு இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.


பெங்களூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி ஆடி வரும் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : IND vs SL, 2nd Innings Highlight: இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா...! தாக்குப்பிடிக்குமா இலங்கை...?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண