இன்றைய நாளில்  சந்திரன் மேஷத்தில்  பயணித்துக் கொண்டிருக்கிறார்.   உங்களுடைய ராசிக்கு  சந்திரன் தரும் பலன்களை பார்க்கலாம்...


  மேஷ ராசி :


ஏற்றங்கள் இரக்கங்கள்  கலந்து நடைபெறும் நாள்.   எதிர்காலத்தை பற்றின சிந்தனை இருக்கும்.   பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.  ராசிக்குள் சந்திரன் பிரவேசிக்கப் போவதால்  ஆன்மீகத்தில் மனம் செல்லும்.


  ரிஷப ராசி:


 பொறுமையே பெருமை என்று இருக்கக்கூடிய நாள்.  வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.   பட்டம் பதவி தேடி வரக்கூடிய நாள்.


  மிதுன ராசி :


எதிர்காலத்தை குறித்து நல்ல திட்டங்களை போடுவீர்கள்.   தாய் வழி உறவினர் ஆதரவாக இருப்பார்கள்.   வேலையின் சற்று கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.   வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். 


 கடக ராசி :


தொழில் மற்றும் வியாபாரம்  தொடர்பான காரியங்கள் வெற்றி அடையும்.  மதியத்திற்கு மேல் சற்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.   பழைய நண்பர்களை சந்திக்க கூடும்.   சிறப்பான நாள்.


  சிம்ம ராசி:


  தொட்டது தொடங்கும் நாள்.   சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.   உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.   வேலை சுமை இருந்தாலும் கூட  அதை இழுத்து போட்டுக் கொண்டு  செய்ய முற்படுவீர்கள்.   குடும்பத்தாரோடு  நேரம் செலவிடும் காலம்.


கன்னி ராசி:


உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால்  எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.   புதிய காரியங்களை எதுவும் தொடங்க வேண்டாம்.   மற்றவரிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.   கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.   பொறுமையாக இருந்தால் பெருமையாக வாழலாம்.


துலாம் ராசி :


  இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கப் போகிறது.   பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.   எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.   வேலையில் அனுகூலமான பலன்களை நடைபெறும்.


 விருச்சிக ராசி :


மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசுவீர்கள்.   உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் கொடுப்பார்கள்.   அதிகப்படியான சிந்தனையில் மூழ்கி இருக்கக்கூடும்.   கடன் சுமை குறையும் நாள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.


தனுசு ராசி:


 முடிக்க வேண்டிய வேலைகளை விரைவாக முடிப்பீர்கள்.   மனம் சற்று ஆன்மீகத்தில் செல்லும்.   பழைய காரியங்களை மீண்டும் அசைபோடக்கூடும்.   எதிர்காலத்திற்கு   தேவையான  சில  காரியங்களை  தற்போது திட்டமிடுவீர்கள்.   ஒரு முறைக்கு இரண்டு முறை எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.


 மகர ராசி:


 மகர ராசிக்கு சிறப்பான நாள்.   பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும்.   மனம் அமைதியாக இருக்கும்.   மற்றவர்களை புரிந்து கொள்ள ஏற்ற நாள் இது. 


 கும்ப ராசி:


 பக்தியோடு இந்த நாளை ஆரம்பிப்பீர்கள்.   வழக்கத்திற்கு மாறாக நண்பர்கள் வந்து பேசுவார்கள்.  நீண்ட தூர பயணங்களை பற்றி சிந்திப்பீர்கள்.   நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.


 மீன ராசி :


வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்.   எவ்வளவு பெரிய சிக்கலான காரியங்களையும் எளிதாக சமளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உங்களின் உதவிகள் தேவைப்படும்.   மனதில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.