தேதி

               : 17.6.2024


நாள்               : திங்கள்கிழமை


நல்ல நேரம்  :


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி ந.நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


மேஷம்:


மேஷ ராசியினருக்கு இன்று தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை இன்று வசூலாகும். சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலைவாய்ப்பு தேடி வரும். நண்பர்களுக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும்.


ரிஷபம்:


ரிஷப ராசியினருக்கு இன்று அமோகமான நாள் ஆகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். தொழில் புரிபவர்களுக்கு இன்று இரட்டிப்பு லாபம் உண்டாகும். வேலையாட்களுக்கு முதலாளிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.


மிதுனம்:


மிதுன ராசியினர் இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பணிபுரியும் இடங்களில் அமைதியுடன் இருப்பது அவசியம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும்.


கடகம்:


கடக ராசியினருக்கு இன்று மிகவும் பணிசுமை அதிகமாக காணப்படும். வழக்கத்தை விட இன்று பணிபுரியும் இடங்களில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் உண்டாகும். ஆனாலும், சுபகாரியத்திற்கான செலவாக இருக்கும். திருமணம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.


சிம்மம்:


சிம்ம ராசியினருக்கு இன்று ஆக்கப்பூர்வமான நாள் ஆகும். இந்த நாள் உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த லாபமும், பாராட்டும் இன்று உங்களுக்கு கிடைக்கும். திருமண வரன்கள் வாயில் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


துலாம்:


துலாம் ராசியினருக்கு இன்று நிம்மதியான நாள் ஆகும். நீண்ட நாட்களாக உங்கள் குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். தீர்க்க முடியாத பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கணவன் – மனைவி பிரச்சினைகள் தீரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். காதல் திருமணத்தில் முடிவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.


விருச்சிகம்:


விருச்சிக ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு உடல் நலக்குறைவுகள் தீரும். ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். திருமணம் குறித்த எண்ணம் மேலோங்கும். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.


தனுசு:


தனுசு ராசியினர் இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். அடுத்தவருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் உண்டாகலாம். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும்.


மகரம்:


மகர ராசியினருக்கு இந்த நாள் சுமூகமான நாள் ஆகும். பணி தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். பெற்றோர்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பெரியவர்களின் அறிவுரைகள் குடும்பத்திற்கு நல்லது ஆகும்.


கும்பம்:


கும்ப ராசியினருக்கு இந்த நாள் மிகவும் அமைதியாக செல்லும். மனதில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குழப்பங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வீர்கள். சிவபெருமான் வழிபாடு மிகவும் சிறந்தது. பிரிந்து சென்றவர்களுடன் மீண்டும் சேர்வதற்கு இந்த நாள் ஒரு தொடக்கமாக அமையும். மனதில் உள்ளதை குழப்பிக் கொள்ளாமல் இறைவன் கையில் நடப்பதை கொடுத்து மனதை சாந்தப்படுத்துங்கள்.


மீனம்:


மீன ராசியினருக்கு இன்று மனநிறைவான நாள் ஆகும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் புதுவரவு உண்டாவதற்கு அறிகுறிகள் உண்டாகும். மங்கல ஓசை வீட்டில் கேட்கும். பிடித்தவர்களுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். செல்போன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.