நல்ல நேரம் :


காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை


இராகு :


மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை


குளிகை :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6 மணி முதல்  காலை 7.30 மணி வரை


சூலம் – தெற்கு : சூரிய உதயம் – காலை 6.35 மணி


 


மேஷம் :


மேஷ ராசிக்காரரர்களே இந்த நாள் உங்களுக்கு ஜெயமான நாளாக அமையும். உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பல அதிர்ஷ்டங்கள் நடைபெறும்.


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று விரும்பிய பொருட்களை இன்று வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் அமைதி உண்டாகும்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். நுட்பமான அறிவு திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் –மனைவி இடையே நீண்டநாட்கள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.


கடகம் :


கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வான நாளாக அமையும். தெய்வீக பணிகளில் தொடர்பான ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள், புதிய முயற்சிகள் மூலம் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலத்தில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள்.


சிம்மம்:


குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பணியிடங்களில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். வரன் தேடுபவர்களுக்கு எளிதில் இன்று வரன் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம். மங்கல செய்திகள் அதிகளவில் இன்று நடக்கும்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் அமைதியாக செல்லும். நுட்பமான அறிவு திறமைகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் புரிபவர்கள் வாடிக்கையாளர்கள் விருப்பத்திதற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்கே இந்த நாள் உங்களுக்கு புகழான நாளாக அமையும். சொந்த தொழிலில் நீங்கள் எடுத்து வந்த முயற்சிக்கு இன்று நல்ல பலன் கிட்டும். சகோதர வழியில் ஆதரவு அதிகரிக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு ஆதரவுகள் குவியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பணவரவு, தனவரவு இன்று நடைபெறும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அன்பு அதிகரிக்கும்.


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன்தொகை இன்று வசூலாகும். உத்தியோக பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுபமான நாளாக அமையும். கலைசார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக இந்த நாள் அமையும். உடனிருப்பவர்களை ஒத்துழைப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு செலவான நாளாக அமையும். அதனால் பார்த்து செலவு செய்ய வேண்டும். உடனிருப்பவர்களுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சவாலான நாளாக அமையும். தொழில் மற்றும் படிப்பில் போட்டி அதிகரிக்கும். இந்த சவால்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆலய வழிபாடு நன்மை பயக்கும்.