நல்ல நேரம் :
காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை
ராகுகாலம் :
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
குளிகை :
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
மேஷம் :
மேஷ ராசிக்கார நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைக்கலாம்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும்.
மிதுனம் :
மிதுன ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாள் நற்பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள். கடினமான சூழ்நிலையையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள்.
கடகம் :
கடக ராசிக்கார நேயர்களுக்கு இந்த நாளில் உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி காண மாட்டீர்கள். புதிய விஷயங்களைக் கற்று வெற்றி பெற வேண்டும்என்ற ஆர்வம் இருந்தாலும் உங்கள் முயற்சிகள் வீணாகும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சிம்மம் :
சிம்ம ராசிக்கார நேயர்களுக்கு இன்றைய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட செயல்களில் கவனம் தேவை. பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க உரையாடுவதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு ஆறுதல் அளிக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே இன்று நற்பலனகள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். சிறிய முயற்சிகள் கூட இன்று வெற்றியை அளிக்கும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே இன்று அதிர்ஷ்டம் அதிக அளவு காணப்படும். நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அதனை முழுமையாகச் செய்வீர்கள். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே இன்று சற்று மந்தமான நிலை காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை அணுகுமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மந்த நிலை காணப்படும். மனக் குழப்பங்கள் காணப்படும். பாதகமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க கவனமாக செயலாற்ற வேண்டும். இன்றைய சவால்களை சந்திக்க மிகவும் பொறுமை அவசியம்.
மகரம்:
மகர ராசிக்கார நேயர்களே இந்த நாள் அபாரமான வாய்ப்பு காணப்படுகின்றது. உங்கள் இலக்குகளை எளிதில் அடைவதற்கான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
கும்பம் :
கும்ப ராசிக்கார நேயர்களே இந்த நாள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கிக் கொள்ளலாம். புதிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் தொடர்புக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் கண்ணோட்டம் விரிவடையும்.
மீனம் :
மீன ராசி நேயர்களே இந்த நாள் மனதில் பதட்டம் காணப்படும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். பிரச்சினைகளை சமாளிக்கலாம். வாக்குவாதங்களை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.