இந்தியாவின் முக்கிய கோவில்களில் ஒன்றான பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற நாளை முதல் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விமர்சையாக தொடங்குகின்றது. அதனை தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டு நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.



இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோவிலில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் காவல்கண்காணிப்பாளர் பவுன்குமார், கோவிலின் இணை ஆணையர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில்  முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் அனுமதி இல்லாததால் மற்ற நாட்களில் 13 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், ஐந்தாம் பிரகாரத்தில் சாமி உலா வரும் பாதையை மற்றும் அண்ணாமலையார் , உண்ணாமுலையம்மன் சன்னதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர். தீபதிருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.



 


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,


இந்தாண்டு தீபத் திருவிழா 7 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு மூலம் கட்டுப்பாடுகளை வெளியிட்டதாகவும்,  அண்ணாமலையார் கோவிலில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தபின் அனுமதி சீட்டுடன் வந்தால் தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த ஆண்டு உள்ளூர் பக்தர்களுக்கு 3 ஆயிரம் பக்தர்கள் அளவிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் நேரடியாக அனுமதி சீட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி கூடுதல் ஆணையர் அலுவலகம், அறநிலை துறை அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஞாயிறு கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் 3000 அனுமதி சீட்டு  உள்ளூர் பக்தர்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அனுமதி சீட்டை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காத நாட்களைத் தவிர மீதமுள்ள நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.




10 ஆம் தேதி அன்று கொடியேற்றம் நடைபெறும் நேரத்திலும்,  அதேபோல்  16 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். ஐந்தாம் பிரகாரத்தில் இந்த நேரத்தில் கோவிலில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் 17ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தீபத் திருவிழாவின்போது 20 லட்சத்து மேல் பக்தர்கள் வரும் காரணத்தினாலே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் பக்தர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


சிறப்பு பேருந்து,  இரயில்,  அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை என்றும் நேற்று கிரிவல பாதையை ஆய்வு மேற்கொண்டதாகவும் அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு தீபத்திருவிழா கொரோனா பெருந்துறை வழிகாட்டு நெறிமுறை உடன் சிறப்பாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார். இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும். சுவாமி ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும்போது உபயதாரர்கள் கட்டளைதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்



அதே போன்று கிரிவலம் மேற்கொள்ளவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் 17 முதல் 19 தேதி வரை புறவழிச்சாலையில் முகாம் அமைத்து வெளியூர் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 10 ஆம் தேதி முதல் முக்கிய மணலூர் பேட்டை சாலை, பெங்களூரு சாலை அத்தியந்தல், வேலூர் சாலை, ஈசானிய லிங்கம், திண்டிவனம் சாலையில் போன்ற இடங்களிலில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும் என்றும் தீபத் தினத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் . 


கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும். ஒருவருக்கு ஒரு இணையதள அனுமதி சீட்டு மட்டும் அனுமதி என்றும் தெரிவித்தார். தீபத் திருவிழாவின் போது கோயில்களில் அனுமதிக்கப்படும் நாட்களில் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது RTPCR பரிசோதனை நெகட்டிவ் சான்று உள்ளிட்டவைகள் இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.