திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  ஜூன் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.40 கோடி வசூல் கிடைத்துள்ளது.




 


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக கோவில் உண்டியலில் பல்வேறு காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 


மேலும் படிக்க: Rasipalan Today, June 25 : சனிக்கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்? ... 12 ராசிகளுக்கும் பலன்..!




இந்த மாதம் முதல் முறையாக கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டது. 2-வது முறையாக கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினர், தூத்துக்குடி ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 


மேலும் படிக்க: சிம்ம லக்னம்.. அதிமுக பொதுச்செயலாளராகிறார் ஈபிஎஸ்.. நேரத்துடன் ஆரூடம் சொன்ன ஜோசியர்!




கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 கிடைத்தது. அதேபோல் நேற்று எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து ரூ.70 லட்சத்து 47 ஆயிரத்து 46 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் இரண்டு முறை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 40 லட்சத்து ஆயிரத்து 82 கிடைத்துள்ளது. அதேபோல் மொத்தத்தில் தங்கம் 2 கிலோ 435 கிராமும், வெள்ளி 15 கிலோ 960 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 359 கிடைத்துள்ளது.




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்களும் முன்வைக்கின்றனர்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண