மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தினத்திற்கு சொந்தமான அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோவில் அமைந்துள்ளது. கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான்.
நோய் தீரவேண்டுமானால் திருமுல்லைவாசலில் அமைந்துள்ள சிவத்தல தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். அதனைத்தொடர்ந்து நோய் தீர கிள்ளி வளவன் இத்தலத்தின் புனித நீராடி நோய் தீர்ந்ததாக வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி முதல் கால் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகபூஜைகள் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.
தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் கந்த பரம்பரை 28 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சக்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன திருக்கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் சுமார் 200 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவில் கோயிலுக்குள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசல் சிக்கி பெரும் அவதிக்கு ஆளாகினர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் வேலையில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டதால் இதன் மூலம் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரை என தகவல்