தமிழ்நாட்டின் தொன்மையான கோயிலான தஞ்சை பெரிய கோயிலை, ஒரு பறவைப் பார்வையில் காணப்பெறும் அரியக்காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.மேலும் படிக்க: உங்கள் பிள்ளைகளின் அறையில் இந்த நிறத்தை அடியுங்கள்.. அப்புறம் பாருங்க


அந்த வகையில், உலகமே வியந்து பார்க்கும் கோயிலாக தஞ்சாவூர் பெரிய கோயில் கருதப்படுகிறது. அந்தக் கோயிலை எப்படி கட்டினார்கள் என்று இன்றளவும் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். கோயிலின் கோபுரத்தை அருகில் இருந்தும், தூரத்தில் பார்த்து ரசித்துள்ளோம். ஆனால், போபுரத்தையும், கோயிலையும் வானத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பது விவரிக்க முடியாது அல்லவா. தற்போது, தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தை மேல் இருந்து பார்க்க கீழே இருக்கும் வீடியோவை பார்க்கலாம். மேலும் படிக்க: திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு


 







டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் தஞ்சை கோயிலின் அழகையும், கீழே இருக்கு மனிதர்கள் எறும்புகள் போல நகர்வதையும் பார்க்கலாம். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க: பெருவெள்ளத்திலும் நிலைத்து நிற்கும் சிவலிங்கம் - பாலாற்றில் நிகழ்ந்த அதிசயம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண