சமீப காலங்களாக உலகம் முழுவதும் நீண்ட ஆண்டுளுக்கு முன்பாகநடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களை காவல்துறையினர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த முறை எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர் தெரியுமா?
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் கியாச்சியோ கமினோ. இவர் அங்கு பல குற்றச்சம்பவங்கள் மற்றும் கடத்தில் தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் 2002ஆம் ஆண்டு அங்கு ஒரு நபரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் அந்த வழக்கில் சிறையில் இருந்த கியாச்சியோ 2002ஆம் ஆண்டின் கடைசியில் தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பல ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். அவர் எங்கு தேடியும் கிடைத்ததால் இவரை தேடப்பட்டு வரும் நபராக இத்தாலி காவல்துறை அறிவித்திருந்தது. மேலும் இவர் வேறு நாடுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் தெரிவித்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவரை போல் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கூகுள் ஸ்டீரிட் வீயூ என்ற செயலியின் மூலம் பார்த்துள்ளனர். உடனடியாக அந்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கியாச்சியோ ஸ்பெயின் நாட்டில் மானுவேல் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் இத்தாலி அதிகாரிகள் விரைவாக ஸ்பெயின் நாட்டின் காவல்துறைக்கு தகவல் அளித்து அந்த நபரை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலியின் கோரிக்கையை ஏற்ற ஸ்பெயின் நாடு காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். அவர் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிடில் இவர் ஒரு உணவு கடையை நடத்தி வந்துள்ளார். அத்துடன் அந்தக் கடையில் இவர் தன்னை ஸ்பெயின் நாட்டவர் போல் காட்டி வந்துள்ளார். இதனால் இவரை கைது செய்ய சென்ற காவல்துறையினர் உண்மையான கியாச்சியோ பெயரை வைத்து அழைத்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தான் அந்த நபர் இல்லை என்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சிறையிலிருந்து காணமல் போன நபர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவரை கூகுள் தொழில்நுட்பம் வைத்து காவல்துறையினர் கண்டறிந்தது பெரும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: கல்யாணம் செய்ய ஒரு தோழி இல்லையே..! ஊரு முழுக்க பேனர் வைத்து வைரலான இளைஞர்.!