சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.


கடக ராசி நேயர்களே!


நிறைய பேருடைய வாழ்க்கையில் அஷ்டம சனியின் தாக்கம் தொடங்கியிருக்கும். இந்த ஆண்டு சுபகிருது ஆண்டு. 2023 ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டு காலம் உங்கள் வாழ்க்கையில் மூன்று நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது.


தான தர்மம் செய்யுங்கள்


அஷ்டம சனியால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய தான, தர்மம் உங்களைக் காக்கும். கைவிடப்படக்கூடிய குழந்தைகள், யாருமில்லாத நபர்களுக்கு உதவுங்கள். தலையணை, போர்வை தான, தர்மம் செய்யுங்கள். இறப்பு சார்ந்த காரியங்களில் தானம் செய்வது எளிமையான பரிகாரம். 


தொழிலில் லாபம் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலக்கட்டம். கட்டுமான பணிகளில் சேருவீர்கள். அரசியலில் வெற்றி ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் பாதுகாப்பு தேவை. ஆனால் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். பெரியவர்களின் உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் தேவை.


ரகசியங்கள் வெளிவரும்!


வேறு இடங்களுக்கு பெயர்ச்சி ஆகவும், பணியிட மாற்றங்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. புதனுடைய வீட்டில் உள்ள கேது நிறைய பகுப்பாய்வை (analysis) கொடுக்கும். இதனால் நிறைய பேரின் வாழ்க்கையில் ரகசியங்கள் வெளியே வரலாம். நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது அவர்கள் உங்களிடம் ரகசியம் பகிருவார்கள்.


அத்தை, சித்தி சம்பந்தப்பட்ட உறவுகளில் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, கவனமாக இருங்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பெண்கள் கவனமாக இருங்கள். ஆண்கள் முன்னேற்றப் பாதையை எடுத்துக்கொள்ளும் நிர்பந்தம் ஏற்படும். தேவைக்கு அதிகமாக வேலை செய்வீர்கள். அதற்கான ஊதியமும் கிட்டும்.


ஆஞ்சநேயர் வழிபாடு


புணர்பூச நட்சத்திரக்காரர்கள், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் நிறைய கஷ்டங்கள் ஏற்பட்டு மேலே வருவீர்கள், போராடி வெற்றுபெறுவீர்கள். பூச நட்சத்திரக்காரர்கள் தான, தர்மங்கள் செய்து மேலே வரலாம். நட்பு வட்டாரங்கள், மூத்தவர்கள் மூலம் இது நடைபெற்றால் மிகப்பெரும் அனுகூலம் கிடைக்கும்.


ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தையும் வளத்தையும் கொடுக்கும். நீங்கள் சாதிக்கக்கூடிய பொறுமை வரும். அதனால் நிறைய மாற்றங்கள் உங்களைத் தேடி வரும்.


மேலும் படிக்க: Tamil New Year Simmam Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களே... பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசம்.. உங்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்கள் இதோ..


Kumba Rasi: "மிகப்பெரிய வாய்ப்புகள் வரும்.. பேச்சில் கவனமா இருக்கனும்..' கும்ப ராசிக்காரர்களே..! தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி?