வருகின்ற சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.


சிம்ம ராசி நேயர்களே!


ஷோப கிருது வருடம், 2023ஆம் ஆண்டு ரொம்ப முக்கியமான ஆண்டு. 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் உடைய வீட்டில் குரு - ராகு சஞ்சாரம் ஏற்பட்டால் குழந்தை பிராப்தம் ஏற்படும். குரு - ராகு சேர்ந்தால் உங்கள் வீட்டில் உங்கள் முன்னோர்களே வந்து பிறப்பார்கள். நீங்கள் ஆண் என்று நினைத்தால் பெண் குழந்தை பிறக்கும். பெண் என்று நினைத்தால் ஆண் பிறக்கும்.  வீரியம் மிக்க குழந்தையாக இருக்கும்.


இந்தக் காலத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் மேஷம், சிம்மம், தனுசு ராசி,  லக்னங்களில் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் அதிகம். மூதாதையர் சொத்துகள் சின்ன பிரச்சினையாகி உங்களை வந்து சேரும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானமாக இருந்தாலும், செவ்வாய் இடத்தில் குரு - ராகு இருப்பதால் வாகனம் ஓட்டும்போது குடும்பத்தினர் கவனம் தேவை. கவனம் என்பது எச்சரிக்கை மட்டுமே.


சனியின் தாக்கம் நிறைய நல்ல விஷயங்களைக் கொடுக்கக் கூடும். சகோதர, சகோதரிகள் மூலம் லாபம் ஏற்படக்கூடும். கணவன் - மனைவி இடையே புதிய உறவு வர வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் புது பிஸ்னஸ் செய்யக்கூடிய பிராப்தம் உள்ளது.  புது மனிதர்களை சந்திப்பீர்கள். ஏழை, எளியோருக்கு உதவினால் நீங்கள் நினைத்தது சட்டென நடக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட எதிர்பாராதவை நன்றாக நடக்கும்.


எப்பவோ செய்த பிரச்சினைகளில் பாதிப்பு, சம்பந்தமில்லாத விஷயங்களில் பிரச்சினையில் சிக்க வாய்ப்புண்டு எச்சரிக்கை.


2ஆம் இடத்துக்கு வரக்கூடிய கேது பகவான் புதனில் இருப்பதால், பேச்சில் வாக்கில் தடை ஏற்படும். சில விஷயங்கள் தடை, தாமதம் ஏற்பட்டு அதன்பின் ஜெயிக்கக்கூடிய பிராப்தம் ஏற்படும். மருத்துவத்தை நாடக்கூடிய நிலை ஏற்படலாம். பெரியவர்களின் உடலை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.


கேதுவின் நட்சத்திரமாகிய மக நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டில் புது உறவு, பெண் குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. நிறைய விஷயங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தேவையான பண வரவு சரியாக வந்து சேரும்.


உத்திரம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அபரிமிதமான யோகம் உள்ளது. வேலையில் நிலைத்தன்மை உள்ளது. வீடு கட்டக்கூடிய பிராப்தம் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. ஜாமீன் கையெழுத்துபோடும்போது எச்சரிக்கையாக இருங்கள். அக்டோபர் மாதத்துக்குப் பிறகு நீங்கள் முன்னேறும் வாய்ப்புகள் உண்டு.


லாட்டரி டிக்கெட், மூதாதையர் பணம், உயில் சம்பந்தப்பட்ட பணம் இவையெல்லாம் வர வாய்ப்புண்டு. மிர்த்திஞ்சய ஹோமம் ஜெபம் செய்வது ஒரே பரிகாரம். ருத்ர ஷூக்தத்தை கேட்டாலே போதும், மனதில் இருக்கக்கூடிய கவலைகள் நீங்கும். அபாரமான ஆண்டாக நிச்சயம் அமையும்.