காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வழி வழியாக நம் முன்னோர்கள் கூறி வந்தனர்.  இது முற்றிலும் உண்மையானது. சூரியனிலிருந்து வரும் ஒளி நம் மீது படும்போது நமக்கு  அளப்பரிய பல வைட்டமின் சக்திகள் கிடைக்கிறது.  குறிப்பாக வைட்டமின் டி சக்தி சூரியனிலிருந்து நமக்கு கிடைக்கிறது.  இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் சூரியன் நமக்கு வழங்குகிறது.  பல தோல் நோய்களிலிருந்து நாம் விடுபடுவதற்கான வழிவகைகளை சூரிய ஒளி செய்கிறது.


சூரியன் என்னும் அற்புத நட்சத்திரம்:


இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் சூரியன் ஆதாரமாக விளங்குகிறது . சூரியன் இல்லை என்றால் இந்த பூமி இருப்பது கடினம் என்று கூறலாம்.  எல்லா கிரகங்களும் எப்படி சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறதோ.  அதேபோன்று தலைவர்களை சுற்றி தொண்டர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் . 


ஜோதிடம் என்பது நமக்கு எட்டாக்கனி கிடையாது.  ஒரு காரியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் சாராம்சம் மட்டும் தெரிந்தால் போதும். வெயிலாக இருந்தால் அது  சித்திரை மாதம் ,  மழையாக இருந்தால் அது  ஐப்பசி மாதம் ,  அதுவே குளிராக இருந்தால் அது மார்கழி மாதம்  இப்படி சூரியனின் நகர்வையும் பூமியின்  சுற்றுவட்ட பாதையை வைத்து காலங்களும் கணிக்கப்படுகிறது.  இப்படி கிட்டத்தட்ட அனைத்துமே சூரியனை நம்பி இருப்பதால்  அவரே நமக்கு தலைமை ஆகிறார் . 


மற்றவர்களை கட்டுப்படுத்தும் சக்தி சூரியனின் ஆதிக்கத்தை கொண்ட நபர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.  தலைவர் என்பவர் யார் ?  ஒரு தலைவர் என்பவர் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம் அல்லது சாந்தமாகவும் இருக்கலாம்  ஆனால்  எப்போதும் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு  நன்மையே செய்ய வேண்டும் என்பதுதான் விதி.   ஜோதிடத்தில் சூரியனை தலைமை பண்போடு ஒப்பிடுவோம்.  


தலைமை பண்பு:


சூரியன் மேஷத்தில் உச்சம் ஆகிறார்  சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.  இப்படி இரண்டு வீடுகளிலும் சூரியன் வலிமையோடு இருப்பவர்கள் நிச்சயமாக தொண்டர்களின் மனநலையை புரிந்து கொள்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர  விதி.  சூரியன் வலிமையோடு இருப்பவர்கள் தான் நிச்சயமாக தலைவர் பதவிக்கு  தகுதியானவர்கள் என்பது இல்லை. எந்த வீட்டில் சூரியன் இருந்தாலும் அவர் தலைவராவார். 


ஆனால் எந்த காரியத்திற்காக ஒருவர் தலைமை ஏற்கிறார் என்பதை பொறுத்து  ஜாதகத்தில் அதற்கான பலன்களும் மாறுபடும்.  உதாரணத்திற்கு நாட்டின் தந்தை மகாத்மா காந்தி. காந்தியின் ஜாதகத்தில் சூரியன் ஆட்சியோ உச்சமும் பெறவில்லை  ஆனால் அவர் தேசத் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  காரணம் அவர் தலைமையேற்ற   போராட்டங்களும் அதன் காரணங்களும்.  அவர் நாட்டின்  விடுதலைக்காக தலைமை ஏற்றார்  அவர் யாரையும் அதிகாரம் செய்யவில்லை. மாறாக அகிம்சையை கடைப்பிடித்தார்.  இப்படியான காரணங்களுக்காக அவர் நம் நாட்டின்  தந்தையாக மாறினார்.  இதை வைத்து பார்க்கும் போது ஒருவருக்கு  சூரியனின் வலிமையை வைத்து தலைமையின் பதவி  இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.


சூரிய பகவான் வழிபாடு :


ஜாதகத்தில்  சூரியன்  நீச்சமாக இருக்கும் பட்சத்தில்  நிச்சயமாக அவருக்கு தலைமை ஏற்கும்  பங்கு இல்லை என்று கூறி விட முடியாது.  நிச்சயமாக அவருக்கு தலைமைக்கான தகுதிகள் உள்ளது.  ஆனால் அதை அவர் எப்படி கையாள வேண்டும் என்பதில் தான் சிக்கல் இருக்கும்.  தனக்குத் தெரிந்ததை அவர் சரி என்று செய்யும்போது  மற்றவர்களின் பார்வைக்கு அது தவறு என்று படலாம்.  இப்படியான சூழ்நிலையிலும்  ஜாதகத்தில் சூரியன் வலிமை குன்று இருக்கும் நிலையிலும், அவர் செல்ல வேண்டியது  நவகிரகங்களில் இருக்கும் சூரிய பகவான் வழிபாடு.  சில கோவில்களில்  சூரிய பகவானுக்கு என்று தனி சன்னதி இருக்கும் ,  ஆனால் பல கோவில்களில் நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருக்கும் சூரியனே நமக்கு பகவானாக  இருக்கிறார்.  இப்படியான சூழ்நிலையில்  நிச்சயமாக நாம் சூரிய பகவானின் வழிபாடு வைத்திருக்கும் பொழுது  நமக்கு தேவையான சூரியனின் கூட நலன்களை வாரி வழங்குகிறார் .


ஞாயிற்றுக்கிழமைகளில்  நீங்கள்  அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று சூரிய பகவான் வழிபாட்டை செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.  எது மாதிரியான  மாற்றங்கள் ஏற்படும் என்றால்  சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார்கள்,  சிலர்  தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்,  சிலரோ  சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்படி எந்த மாதிரி நீங்கள் தொழிலை செய்தாலும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை நிர்வகித்து வந்தாலும் கூட  தலைமை பண்பு என்பது பன்மடங்கு  உயர்வு அடையும்.  நவகிரகங்களில் இருக்கும் சூரியனை வழிபட முடியவில்லை.  வேலை சரியாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு  சாதாரணமாக நீங்கள் சாலையில் செல்லும் போது வானத்தில் இருக்கும் சூரியனை நினைத்து  மனதார பிரார்த்தனை செய்தாலே போதுமானது.  அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். சங்கடங்கள் தீரும்  வாழ்க்கை பிரகாசம்  அடையும் .