நாள் - 07.11.2023 -  செவ்வாய் கிழமை


நல்ல நேரம்:


காலை 8.15 மணி முதல் காலை 9.00 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வரவுகள் ஏற்படும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாய்மாமனிடத்தில் அனுசரித்துச் செல்லவும். செய்தொழிலில் மாற்றமான சூழல் அமையும். தடங்கல் விலகும் நாள்.


ரிஷபம்


வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். மனை சார்ந்த விவகாரங்களில் பொறுமை வேண்டும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவுகளின் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.


மிதுனம்


புரட்சிகரமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் பங்கு பெற்று மனம் மகிழ்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். சிக்கல் குறையும் நாள்.


கடகம்


பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆபரணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். தனம் நிறைந்த நாள்.


சிம்மம்


வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கராரான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் தயக்கமின்றி செயல்படுவது நல்லது. மகிழ்ச்சி நிறைந்த நாள்.


கன்னி


உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வாகன மாற்ற முயற்சிகள் கைகூடும். அந்நிய தேச பயண சிந்தனைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் தோன்றி மறையும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.


துலாம்


நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். இணைய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனம் விரும்பிய புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.  


விருச்சிகம்


வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணியில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். அரசு வழியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரம் மேம்படும். பாசம் நிறைந்த நாள். 


தனுசு


குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாமியாரிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உற்பத்தி துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். அரசு அதிகாரிகள் விவேகத்துடன் செயல்படவும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் தெளிவு பிறக்கும். பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


மகரம்


வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதளவில் எதையோ இழந்தது போன்ற உணர்வுகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் வரும். சிக்கலான நேரத்தில் நினைத்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.


கும்பம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.


மீனம்


சுயதொழில் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய சிந்தனைகள் கைகூடி வரும். உடல் உபாதைகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சேவைப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.