மேஷ ராசி :
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசி அதிபதி பத்தாம் பாவத்தில் உச்சம் பெறுகிறார். ஏற்கனவே கடந்த ஒன்றை வருடமாக ராகுவின் பிடியில் சிக்கித் தவித்த நீங்கள் தற்போது ஒரு வழியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழியை கண்டுபிடித்து இருப்பீர்கள். உங்களுடைய ராசி அதிபதி பத்தாம் இடத்தில் உச்சம் பெறுவதால், தொழில் ஸ்தானம் வலுப்பெறுகிறது. நீங்களே வலுப்பெறுகிறீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரப்போகிறது. உங்களை அடக்க நினைத்தவர்கள் அடங்கிப் போவார்கள். ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்து உயர் அதிகாரிகளின் மதிப்பை பெறப்போகிறீர்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது. ஆண் வாரிசுகள் உண்டு. தொட்டது தொடங்கும்.
ரிஷப ராசி :
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருந்த ரிஷப ராசி அன்பர்களுக்கு திருமண யோகம் வரப்போகிறது. தொழில் மேன்மை முன்னேற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறப் போகிறீர்கள். குறிப்பாக நீங்கள் செய்த வேலை மற்றவர்களுக்கு தெரிய போகிறது. அதன் மூலம் புகழ் கூடும். வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று இருந்த ரிஷப ராசி வாசகர்களுக்கு, தற்போது இந்த கனவு நினைவாக போகிறது. நீண்ட தூர பயணம் மேற்கொள்ளப் போகிறீர்கள். ஆன்மீக காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தெய்வ அனுகிரகம் கிட்டும்.
மிதுன ராசி :
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு எட்டாம் பாவத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். அப்படி என்றால் லாபாதிபதியும், ஆறாம் அதிபதியும் எட்டாம் வீட்டில் உச்சம் பெறுவதால் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். உங்களுக்கு எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும், அந்த கடன் சுமை பாதியாக குறைய போகிறது. மறைவான எதிரிகள் உங்களுக்கு இருந்தாலும், அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓட போகிறார்கள். நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கைக்கு உடனடியாக வந்து சேரும். எதிர்பாராத தன வரவு உண்டு. வியாபாரம் தொழில் போன்றவை மூலம் தோல்வி ஏற்பட்ட உங்களுக்கு, புதிய வியாபாரம் புதிய முயற்சிகள், புதிய மக்கள் வரவு என்று அதிகப்படியான லாபத்தில் பிழைக்க போகிறீர்கள். லாபாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் ஆயுள் ஸ்தானம் பலமடைகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மிதுன ராசி வாசகர்களே நீங்கள் விரைவில் சுகம் பெற்று வீடு திரும்புவீர்கள்.
கடக ராசி :
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஏழாம் பாவத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருக்கிறார். ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது, எந்த வேலை செய்தாலும் கை கூடவில்லை என்று மனம் கலங்கி தவிக்கும் உங்களுக்கு இதோ ஒரு பொன்னான வாய்ப்பு. பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்ற கூற்றின்படி, வேலையில் சிறு சிறு தொய்வுகளும், அலைச்சல்களும் உங்களுக்கு இருந்தாலும் இப்போது பெயர்ச்சி அழைக்கும் செவ்வாய் உங்களுக்கு நன்மையை வாரி வழங்கப் போகிறார். அதிலும் குறிப்பாக உங்களுடைய பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவதால் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். பெரிய, பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த காத்திருந்த ஒரு காரியம் விரைவில் நடைபெறும். புத்திர பாக்கியம் சிறப்பாக உள்ளது. திருமண பேச்சுவார்த்தைகள் சட்டென்று முடியும். அடுத்து வரக்கூடிய அடுத்த நாட்கள் உங்களுக்கு பொன்னான நாட்கள்.
சிம்ம ராசி :
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆறாம் வீட்டில் உச்சம் பெறுகிறார். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள் மலையளவு இருந்த கடன் கடுகளவு குறையும் உங்களுக்கு ஆற்றல் உருவாகும். நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக காத்திருக்கும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ் என்று சதா அலைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர், வெளி மாநிலம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிம்ம ராசிக்கு இரண்டாம் இடத்தில் கேது இருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க உத்தியோகத்தை பெறப்போகிறீர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்.
கன்னி ராசி :
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவகத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். மூன்றாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் ஐந்தாம் பாவகத்தில் உச்சம் பெறுவது எதிலும் நன்மையே தரும். குறிப்பாக நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வரும் உங்களுக்கு தீர்ப்பு சாதகமாக முடியும். ஐந்தாம் பாவகத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் நிச்சயமாக உத்தரர்கள் வழியில் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லை என்று காத்திருந்த உங்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது. திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். எண்ணிய எண்ணங்கள் சிறப்பாக முடியும். ஐந்தாம் பாகத்தில் 40 நாட்கள் இருக்கும் வரைக்கும் செவ்வாய் உங்களுக்கு நன்மையை வழங்கப் போகிறார்.
துலாம் ராசி :
எனக்கு அன்பான துலாம் ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். ஏழாம் அதிபதி நான்காம் பாவகத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி திருமண காரியங்கள் சுமூகமாக நடைபெறும். வீடு வாங்க வேண்டும் என்று காத்திருந்த துலாம் ராசி அன்பர்களே, இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நிலம் பத்திரப்பதிவாகும். கனவு இல்லம் கைக்கு வரும். வாகனம் வாங்க வேண்டும் என்று காத்திருந்த உங்களுக்கு இது ஒரு பொன்னான காலகட்டம். அற்புதமான ஒரு வாகனத்தை வாங்கி சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தான நிலையில் சென்று அமர போகிறீர்கள்.
விருச்சிக ராசி :
விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவகத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார் அப்படி என்றால் தைரியம் கூட போகிறது. புகழ் கூட போகிறது. வெற்றி ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் நீங்கள் நினைத்த காரியம் அப்படியே நடக்கப் போகிறது. பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு, இதுதான் பொன்னான காலகட்டம். விருச்சிக ராசிக்கு ராசி அதிபதி மூன்றாம் பாவத்தில் உச்சம் பெறுவதால் சமுதாயத்தில் புகழ் கூடும். பெரிய பெரிய இடங்களில் உங்களுடைய புகழ் அந்தஸ்து உயரப்போகிறது. இந்த செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றித் திருமகள் என்றைக்கும் உங்களை இறுகப்பற்றப் போகிறார். வாழ்த்துகள்.
தனுசு ராசி :
அன்பான தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில் உச்சம் பெற போகிறார்.. நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் உங்களுக்கு, இதோ புத்திர பாக்கியம் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்புகள் கூடி வரப் போகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான காலகட்டம் இதுதான். சதா வேலை, வேலை என்று இருந்த தனுசு ராசி வாசகர்களே, இதோ உங்கள் வேலையெல்லாம் ஒருபுறம் எடுத்து வைத்துவிட்டு குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான காலம் இந்த செவ்வாய் பெயர்ச்சியின் காலகட்டம் தான். நீண்ட தூர பிரயாணம் குடும்பத்துடன் மேற்கொள்ளப் போகிறீர்கள். தனஸ்தானம் வலுவாக இருப்பதால் அதிகப்படியான பணம் உங்களுடைய இருப்பு தொகையில் வந்து அமரப் போகிறது.
மகர ராசி :
அன்பான மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் அமர்ந்து உச்சம் பெற போகிறார். ஏற்கனவே ஏழரை சனியின் பிடியில் இருக்கும். உங்களுக்கு செவ்வாய் ராசியில் அமர்வது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரப் போகிறது. காரணம் என்னவென்றால் மகர ராசிக்கு செவ்வாய் லாப அதிபதி. லாபாதிபதி நிச்சயமாக லாபத்தை தான் கொண்டு வரப் போகிறார். பெரிய, பெரிய கான்ட்ராக்ட்கள் கையெழுத்தாக போகிறது. நடக்கவே நடக்காது என்று இருந்த பல காரியங்கள் நடைபெறப்போகிறது. நான்காம் அதிபதி செவ்வாயாகி அவர் லக்னத்தில் உச்சம் பெறுவதால் வீடு நிலம் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த மகர ராசி வாசகர்களே, இதோ புதிய வாகனம் உங்கள் இல்லம் தேடி வர போகிறது. அனைத்தும் சாதகமாக முடியும்.
கும்ப ராசி :
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12ஆம் பாவத்தில் செவ்வாய் உச்சம் பெறுகிறார். அப்படி என்றால் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள போகிறீர்கள். குடும்பத்துடன் சில நேரம் செலவிடுவதற்கான காலகட்டம் வந்து விட்டது. மூன்றாம் பாவம் அதிபதி 12ஆம் பாவத்தில் உச்சம் பெறுவதால், நிச்சயமாக தூரதேசம் அயல்நாடு என்று செல்ல வேண்டி இருந்த அனைத்து கும்ப ராசி வாசகர்களுக்கும், இதோ விசா உங்கள் கையில் வரப்போகிறது. ஒரு கவலை மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது. நிம்மதியான உறக்கம் இல்லையே என்று ஏங்கி இருந்த உங்களுக்கு உறக்கத்திற்கான காலமும் இதுதான். நல்ல தேக ஆரோக்கியம் மருத்துவமனையின் மூலமாக ஆரோக்கியம் உயர்வடைவது போன்றவை உங்களுக்கு ஏற்படும்.
மீன ராசி :
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு லாவாதிபதி சனிபகவான் 12ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானும் வந்து அமர்கிறார்கள். மீன ராசிக்கு முதல் தர யோகாதிபதி செவ்வாய் தான். குறிப்பாக மீன ராசிக்கு இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் ஆகி பதினோராம் வீட்டில் அமர்வதால் ஒரு வேலைக்கு இரண்டு வேலை செய்தாலும் அதில் நீங்கள் வெற்றியடைய போகிறீர்கள்.
வீடு, நிலம் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்று இரண்டாம் திருமணத்திற்காக காத்திருக்கும் மீன ராசி வாசகர்களே, இதோ இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள். இந்த செவ்வாய் பெயர்ச்சி மூலம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. ஆன்மீக காரியங்களில் மனம் செல்லும் குலதெய்வ அனுகிரகம் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தம். அனைத்தும் நன்மையாகவே முடியப்போகிறது.