சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளன. அதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
10 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று ஒரே நாளில் தொடங்குகின்றன. எனினும் 10ஆம் வகுப்புக்கு மார்ச் 13 அன்று தேர்வு முடியும் நிலையில், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வுகள் முடிகின்றன. தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை
- பிப்ரவரி 15 - தொழில்முனைவோர்
- பிப்ரவரி 16 -பேங்க்கிங்
- பிப்ரவரி 19 -இந்தி
- பிப்ரவரி 22- ஆங்கிலம்
- பிப்ரவரி 27 -வேதியியல்
- பிப்ரவரி 29 -புவியியல்
- மார்ச் 4 -இயற்பியல்
- மார்ச் 9- கணிதம்
- மார்ச் 12- உடற்கல்வி
- மார்ச் 15- உளவியல்
- மார்ச் 18- பொருளாதாரம்
- மார்ச் 19 -உயிரியல்
- மார்ச் 22 -அரசியல் அறிவியல்
- மார்ச் 23- கணக்கியல்
- மார்ச் 27 -வணிக ஆய்வுகள்
- மார்ச் 28 -வரலாறு
- ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம்
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?
- பிப்ரவரி 15 – ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள்
- பிப்ரவரி 19 – சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்
- பிப்ரவரி 20- தமிழ் உள்ளிட்ட தேர்வுகள்
- பிப்ரவரி 21 - இந்தி
- பிப்ரவரி 26 –ஆங்கிலம்
- மார்ச் 2 -அறிவியல்
- மார்ச் 4 – வீட்டு அறிவியல்
- மார்ச் 7 - சமூக அறிவியல்
- மார்ச் 11 - கணிதம்
- மார்ச் 13 - தகவல் தொழில்நுட்பம்
ஹால் டிக்கெட் எப்போது?
பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
* https://www.cbse.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* 2024ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.
* பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
* அல்லது https://cbseit.in/cbse/web/regn/login.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து சென்றும், ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
* இதில் பெயர், பதிவு எண், தேர்வு செய்யப்பட்ட பாடங்கள் தேர்வு மையங்கள், தேர்வு code, தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
கையெழுத்து கட்டாயம்
மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை. அத்தகைய ஹால் டிக்கெட்டை வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே நேரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in