அன்பார்ந்த  சிம்ம ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  இந்த செப்டம்பர் மாதம்  எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  முதலில்  சிம்மத்திற்கு  பத்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். வேலையில் சற்று பதற்றமான சூழ்நிலையை ஒரு வேலை கொடுத்து இருக்கலாம். ஒரு சிலர் விருப்பப்பட்டு வேலையை மாற்றி இருக்கலாம்.  நான் மேற்கொண்டு படிக்கப் போகிறேன் ஆகையால் வேலை ஒன்றும் பெரிதாக செய்யப் போவதில்லை என்றும்,  விருப்பப்பட்டே வேலையை தவிர்த்து இருக்கலாம்.  


இன்னும் சிலருக்கு  வேலையில் இருக்கும் போது சிலரால் தொந்தரவுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தது.  ஆகையால் நானே வேலையை விட்டு விட்டேன் என்றும் கூட கூறியிருக்கலாம்.   நான் மேலே சொன்ன அனைத்தும் நடக்காமல் கூட சிலருக்கு இருந்திருக்கலாம்.  


சிம்மத்துக்கு சிறப்பான மாதம்:


வீட்டில் குரு வந்த சிம்ம ராசி அனைவருக்கும் ஒரே மாதிரி நடக்க வேண்டும் என்பது இல்லை .காரணம் ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் அவரவர் தசா புத்திக்கு ஏற்ப தான்  நிச்சயமாக காரியங்கள் நடைபெறும்.   கோச்சார பலன்களும் நிச்சயமாக உண்டு அதிலும் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதை சமாளிக்க கூடிய அளவிற்கு உங்களிடம் புத்தி கூர்மை இருந்தாலே போதும் அந்த காலகட்டத்தில் நீங்கள் கடந்து விட்டால், பிறகென்ன உங்களுக்கு பிரச்சனை  அனைத்தும் உங்களுக்கு சாதகமாகத்தான் நடக்கும். 


சில  விதிவிலக்குகள் உண்டு.  அந்த  வகையில் தற்போது நடைபெறப் போகும் இந்த  செப்டம்பர் மாதம் உங்களுக்கு  மிகப்பெரிய  பல  நல்ல முன்னேற்றங்களை கொண்டு வந்து கொடுக்கப் போகிறது. சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்  சொந்த வீட்டில் உங்களுடைய ராசியிலேயே ஆட்சி பெற்று விளங்குகிறார்  பிறப்பு ஜாதகத்தில் எவ்வளவு வலிமை குன்றிய லக்கன அதிபதி இருந்தாலும், ராசி அதிபதி தற்போது வலிமை பெற்று விளங்குவது உங்களை தாக்குபவர்களுக்கு தாக்குதல் நடக்கும் என்பது தானே விதி.   உங்களை பகைத்துக் கொண்டாலே  அவர்கள் இருந்த இடம் தெரியாமல் தானே போவார்கள்.   நீங்கள் சொல்வது தான் விதி செய்வதுதான் நடக்கும் என்ற பிரமாதமான அடிப்படையில் தான் பலன்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறப்போகிறது.


அதிகரிக்கப் போகும் பணவருவாய்:


 வேலையில் சில தடுமாற்றம் ஏற்பட்டு அதன் மூலம் பண வருவாய் குறைந்து இருந்தால்,  கடன்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை இருந்திருக்கலாம்.  தற்போது அந்த நிலை மாறி  சிம்மத்திற்கு இரண்டாம் வீட்டில் பத்தாம் அதிபதி நீச்சம் பெறுவது  கேது நீச்ச பங்கம் கொடுத்த பின்பாக நல்ல முன்னேற்றமும், மற்றவர்கள் மூலமாக பணவருவாயும் கூட ஏற்படுத்துவார்.  இறுதியாக  செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி பெறப் போகும் சுக்கிரனால், வேலையில் ஒரு ஸ்திரத்தன்மை, ஒரு வலிமை, அசைக்க முடியாத ஒரு திடம் போன்றவை வேலையில் உங்களுக்கு உருவாக்கி கொடுப்பார் .  


புதிய காரியம் வெற்றி பெறும்:


ஒரு புதிய காரியத்தை தொடங்கப் போகிறீர்கள் அல்லது தொடங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் அந்த காரியம் வெற்றி அடைவதற்கு நீங்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது இல்லை. தற்போது இந்த செப்டம்பர் மாதத்தில்  அந்தப் பலன் உங்களுக்கு துளிர்விட ஆரம்பித்து விடும் அதை நீங்கள் அனுபவிக்கலாம் காரணம் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெரும் சுக்கிரன் நீங்கள் என்ன பலன் கிடைக்க வேண்டும் என்று விதை விதைத்தீர்களோ அந்த பலனை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து காட்டி விடுவார். 


ஆகையால் தற்போது வரக்கூடிய காலங்கள் அனைத்தும் நல்ல முன்னேற்றமான காலங்களாக இருப்பதால் கவலை வேண்டாம்.  பிரகாசமான எதிர்காலம் மற்ற எதிரிகளுக்கு சிம்மசப்படமாய் நிச்சயமாக விளங்கும் நேரம் உங்களுக்கு வந்து விட்டது.


  வணங்க வேண்டிய தெய்வம்:   ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு சிறந்த முன்னேற்றத்தை கொண்டு வரும்