அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.  அதிபதி நான்காம் வீட்டில் நீச்சமடைகிறார்.   ஏற்கனவே நான்காம் வீட்டில் கேது அமர்ந்து கொண்டு.  வீடு நிலம் வாகனம் தாயாரின் உடல்நிலை இடத்தை மாற்றுவது அறையை மாற்றுவது அல்லது பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை சச்சரவு போன்றவை நீங்கள் சமாளித்து இருக்கலாம் அல்லது ஓரளவுக்கு அதை கடந்தும் வந்திருக்கலாம் . 


பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி:


தற்போது அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல பனிரெண்டாம் அதிபதி நான்காம் வீட்டில் வந்து நீட்ச்சமடைகிறார்.  என்னவென்றால் விரயம் என்று சொல்லக்கூடிய உங்களிடமிருந்து கரையக்கூடிய பணமோ பொருளோ அல்லது உடல் உழைப்போ எதுவாகினும் அவர் நான்காம் வீட்டிற்கு வந்து பணம் செலவாகாது பொருள் விரயமாகாது. பெரியதாக உங்களுக்கு  பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் இருக்கப் போகிறது.  


குறிப்பாக ஏற்கனவே நான்காம் வீட்டில் இருக்கும் கேது உங்களின் உடல் நிலையை சற்று பாதித்து முதுகுத்தண்டு பிரச்சனை, வயிற்று வலி, கை, கால் மூட்டு பிரச்சனை, தலைவலி, முதுகு வலி, அல்லது  பின் மண்டை வலிப்பது போன்ற சின்ன விஷயங்கள் கூட பெரிதான பிரச்சனைகள் கொண்டு போய் விட்டு இருக்கலாம்.  ஆனால் தற்போது அதற்கெல்லாம் தீர்வாக இந்த மாதத்தின் கிரக சூழ்நிலைகள் உங்களுக்கு ஏதுவாக இருக்கிறது  சூரியன் ஆட்சி வீட்டில் மூன்றாம் ஸ்தானத்தில் அமர்ந்து வெற்றியை கொடுக்கும் அதே சமயத்தில் செப்டம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரனும் ஆட்சி வீட்டிற்கு சென்று அவரின் வலிமையை தற்போது உங்களுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 


ஏற்ற காலம்:


சுக்கிரனை பொறுத்தவரை மிதுனத்திற்கு ஐந்தாம் பாவத்தில் ஆட்சி பெறுவது.  நீங்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவது, அரசு வழி ஆதாயம் பெறுவது,  அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த காலம் நல்ல ஏற்றமான காலமாக அமையப் போகிறது.   சூரியன் உங்களுக்கு நான்காம் வீட்டில் வந்து அமருகிறார் அப்படி என்றால் இதுவரை உங்களுக்கு நான்காம் வீட்டால் இருந்து வந்த பிரச்சனைகள் நிலம் இடம் தொடர்பான வழக்குகள்  நடந்து வந்தால் அந்த வழக்குகளில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.


உங்கள் பக்கம் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். பத்தாம் இடத்திற்கு ஏழாம் வீட்டில் சூரியன் இருப்பது தொழில் ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றத்தையும், செல்வாக்கையும் உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கும். 


பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்:


அடுத்தவர் பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேர வாய்ப்புண்டு. அப்படி என்றால் வியாபாரம் செய்பவர்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை சந்தித்து நல்ல நிலைமைக்கு உங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.   உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மனம் வருந்தி உங்களுடன் வந்து சேருவார்கள் ஏற்கனவே குரு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து சொல்லும்னா விரயங்களை உங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கலாம், ஆனால் கவலை வேண்டாம்.


இந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடைய அனைத்து செலவுகளும் கட்டுக்குள் வரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்களோடு நல்ல இணக்கமான போக்கு காணப்படும். பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களிடம் இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் கூட நீங்கள் வாங்கக்கூடும். இப்படியான வரக்கூடிய செப்டம்பர் மாதம் உங்களுக்கு அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.


வணங்க வேண்டிய தெய்வம்:  உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள் விசேஷங்கள் நடைபெறும்