மேஷம்


உத்தியோக பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். திருத்தலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.


ரிஷபம்


உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் எதிர்மறையான சிந்தனைகள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.


மிதுனம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். முதலீடுகள் செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


கடகம்


வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். இழுபறியான தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.


சிம்மம்


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் வழியில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.


கன்னி


அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். வரவுகளுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.


துலாம்


திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். நட்பு விரிவடையும் நாள்.


விருச்சிகம்


வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதிய கண்ணோட்டம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


தனுசு


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான புதிய வியூகங்களை அமைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.


மகரம்


உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கும்பம்


வியாபார ரீதியான முயற்சிகள் கைகூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்கின்ற செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். அனுகூலம் நிறைந்த நாள்.


மீனம்


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பக்தி நிறைந்த நாள்.