நாள்: 04.01.2023


நல்ல நேரம்:


காலை 09.30 மணி முதல் காலை 10.30 மணி வரை









மதியம் 10.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை 


சூலம் - வடக்கு


மேஷம்


குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். மனதில் வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.


மிதுனம்


பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.


கடகம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.


சிம்மம்


மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.


கன்னி


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


துலாம்


கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவத்தின் மூலம் புதுமையான சூழல் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.


விருச்சிகம்


உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு


நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். விரயம் நிறைந்த நாள்


மகரம்


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.


கும்பம்


வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


மீனம்


நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதில் வெற்றி கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.