ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா கடத்தப்பட்ட செந்திலை தேடி அலைய தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, அமுதா ரோட்டில் செந்திலை தேடி ஓடி வந்து கொண்டிருக்க ரோட்டில் குங்குமம் சிந்திக் கிடக்க அமுதா யோசிக்கிறாள். அவளுக்கு செந்திலிடம் குங்குமமும் பூவும் குடுத்தது நினைவுக்கு வர குங்குமம் விழுந்த திசையை நோக்கி ஓடுகிறாள். ஹாஸ்பிட்டலில் டாக்டர் செந்திலின் வருகைக்காககாத்துக் கொண்டிருக்கிறார்.


செந்தில் குடோனில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்துசெல்ல ரவுடிகள் அவனை தேட மாயா தனது தோழியிடம் செந்திலுக்கு கண் திரும்ப கிடைக்கனும்.. எனக்கும் அவனுக்கும் ஒரு உறவு இருக்கு என்று சொல்கிறாள். இங்கே ரவுடிகள் செந்திலை கண்டு பிடித்து வழிமறித்து செந்திலை கிண்டல் செய்கின்றனர்.  அதை வீடியோ காலில் குமரேசனுக்கு காட்ட, குமரேசனும் உமாவும் சந்தோஷப்படுகின்றனர்.


செந்தில் தடுமாறி கீழே விழப் போக அமுதா அவனை தாங்கி பிடித்து ரவுடிகளை அடித்து வெளுத்து செந்திலை அங்கிருந்து ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல ஒருவன் செந்திலின் தலையில் அடித்து விடுகிறான். செந்தில் மயங்கி கீழே விழ அமுதா அவனை இழுத்தபடி ரோட்டருகே கொண்டு வர டாக்டர் போன் செய்து சீக்கிரம் வாங்க, ஆபரேஷன் பண்ற டாக்டருக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு என்று சொல்கின்றனர்.


அமுதா செந்திலை ஒரு தள்ளுவண்டியில் ஏத்தி அவனை ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்ல டாக்டர் தனக்கு டைம் ஆகி விட்டதால் கிளம்புவதாக சொல்ல மாயா டாக்டரிடம் கெஞ்சுகிறாள். அமுதா தள்ளு வண்டியை ஒரு டாக்சி மேல் இடிக்க உள்ளே டாக்டர் இருக்கிறார். டிரைவர் அமுதாவை பின்னால் போக செல்கிறார்.


ரவுடிகள் உமாவுக்கு போன் செய்து அமுதா வந்து செந்திலை அழைத்து சென்றுவிட்டதாக சொல்ல, உமா கோபத்துடன் கொந்தளிக்க இங்கே அமுதா செந்திலை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வர டாக்டர் அவளிடம் அந்த டாக்டர் பிளைட்டுக்கு நேரமாச்சுனு கிளம்பி விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார். அமுதா கெஞ்சி அழ பின்னால் ப்ளைட்டுக்கு சென்ற டாக்டர் திரும்பி வருகிறார். ஒரு புருஷனுக்கு கண் பார்வை கிடைக்கனுங்குறதுக்காக ஒரு பொண்ணு இவ்வளவு கஷ்டபட்டிருக்கா, இதை பார்த்துட்டு நான் அமெரிக்காவுக்கு போயி நான் என்ன பண்ண போறேன் என சொல்லியபடி ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்ல அமுதா நன்றியுடன் அவரை பார்க்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.