RasiPalan Today August 09:


நாள்: 09-08-2023 - புதன்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் மதியம் 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


செயல்பாடுகளில் இருந்துவந்த  சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்,


ரிஷபம்


உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சில பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாக இருக்கவும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஓய்வு நிறைந்த நாள்.


மிதுனம்


தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணங்களால் விரயம் உண்டாகும். உடல் அசதி ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நிறைவு நிறைந்த நாள்.


கடகம்


பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.


சிம்மம்


உறவினர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


கன்னி


புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றம் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த  சோர்வு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.


துலாம்


மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூகப் பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசதிகள் நிறைந்த நாள். 


விருச்சிகம்


பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பக்தி நிறைந்த நாள்.


தனுசு


எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.


மகரம்


குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த  இன்னல்கள் குறையும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.


கும்பம்


எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். தனம் நிறைந்த நாள்.


மீனம்


சுப முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. இசை சார்ந்த துறைகளில் முனேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். களிப்பு நிறைந்த நாள்.