நாள்: 08.06.2023 - வியாழக்கிழமை


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை





குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் நம்பிக்கை ஏற்படும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கற்கும் திறனில் புதுமைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மதிப்பு நிறைந்த நாள்.


ரிஷபம்


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவுபெறும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வேலை சாதகமாக அமையும்.  முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.


மிதுனம்


பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.


கடகம்


கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செல்வாக்கு நிறைந்த நாள்.


சிம்மம்


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.


கன்னி


எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் அனுபவம் மேம்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். மருத்துவத்துறையில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.


துலாம்


மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை வெளிப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். இரக்கம் வேண்டிய நாள்.


விருச்சிகம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய ஆலோசனைகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.


தனுசு


நெருக்கமானவர்களின் வழியில் ஒற்றுமை ஏற்படும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும்.எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்பு அதிகரிக்கும். புதிய இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும்.  தவறிய பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.


மகரம்


பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இனம்புரியாத சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நுட்பமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


கும்பம்


வெளிவட்டார பயணங்களில் கவனம் வேண்டும். கால்நடை பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் நிதானம் வேண்டும். தேர்ச்சி நிறைந்த நாள்.


மீனம்


அணுகுமுறையில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.  புதுவிதமான அணிகலன்களின் மீது ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.