நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.


மிதுனம்


சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் வியாபாரம் தொடர்பான பொருட்களில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறதி குறையும் நாள்.


கடகம்


வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பலவிதமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


சிம்மம்


வெளிஉலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்தவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த சாதகமற்ற சூழல் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.


கன்னி


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதில் புது விதமான சிந்தனைகள் மேம்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.


துலாம்


பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் தனலாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.


விருச்சிகம்


புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மற்றும் அதற்கான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு


எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


மகரம்


குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கும்பம்


நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், புதிய அறிமுகமும் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மீனம்


வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபமும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.  இன்பம் நிறைந்த நாள்.