நாள் - 06.07.2023 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் துரிதம் உண்டாகும். மனதில் புதுவிதமான தெளிவு ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
மிதுனம்
திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். நெருக்கமானவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணி நிமிர்த்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடகம்
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அறிமுகம் நிறைந்த நாள்.
சிம்மம்
துரிதமாக செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் நிமிர்த்தமான உதவி கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
கன்னி
வருமான உயர்வுக்கான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். இனணயம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புத்துணர்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.
விருச்சிகம்
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு
உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். நுட்பமான சிந்தனைகளின் மூலம் பலரின் அறிமுகத்தை பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் வரவுகள் மேம்படும். சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.
மகரம்
பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் மேம்படும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முதலீடு சார்ந்த உதவி கிடைக்கும். புதிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புரிதல் நிறைந்த நாள்.
மீனம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். திறமையான பேச்சுக்களின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.