நாள்: 06.08.2022


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு :


காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை


குளிகை :


காலை 6.00 மணி முதல் மதியம் 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் –கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று  மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று  முன்னேற்றகரமான நாள். உங்கள் இலக்குகளை அடையும் ஆற்றல் மிகுந்து காணப்படும்.உங்கள் பேச்சாற்றல் காரணமாக நீங்கள் பிரபலமாவீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று உபரிப் பணம் காணப்படும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று சராசரிக்கும் சற்று மேலான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இலக்கை அடைய நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். பணியில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இறுதியில் உங்கள் நேர்மையான முயற்சியால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று சூழ்நிலைகள் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். தகவல் தொடர்புக் குறைபாடு காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். பணியில் வளர்ச்சி காண நீங்கள் மிகுந்த முயற்சியும் கடின உழைப்பும் கொள்ள வேண்டும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று  சிறப்பான சூழ்நிலை காணப்படும். உங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும். உங்கள் சுய முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறப்பான நாள். போதிய பணம் காணப்பட்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் புதிய முதலீடுகளுக்கு திட்டமிடலாம்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும். இன்று உங்கள் இலக்குகளை அடைய உங்கள் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. என்றாலும் உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை . இன்று சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்காமல் இருக்க உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று துடிப்பான நாளாக இருக்காது. எந்தவொரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். மனதை பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்துங்கள். கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணிகளில் தவறுகள் செய்ய நேரலாம். உங்கள பணிகளை கவனமுடன் திட்டமிட வேண்டும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. பணியிடத்தில் பதட்டம் காணப்படும். சகபணியாளர்களின் மூலம் தொல்லைகள் ஏற்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பெண் ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்கவும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று நன்மைகள் விளையும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.இன்றைய செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டியது அவசியம். பணிகள் அதிகமாக காணப்பட்டாலும் நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். பணிகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். உங்கள் சுய முயற்சி மூலம் உங்கள் செயல்களில் வளர்ச்சி காண்பீர்கள். புதுமையான முறையைக் கையாள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று இன்று துடிப்பான நாளாக இருக்காது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கஷ்ட நேரங்களில் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் செயல்களின் முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை காணப்படும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தியானப் பயிற்சி ஆறுதலை அளிக்கும். பணியிடத்தில் சவால்களை சந்திக்க திறமையாக திட்டமிட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும் போது நீங்கள் தவறு செய்ய நேரலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண