நாகையில் ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வுக்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்த நாகூர் தர்கா வாசல் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். நாகை அருகே கால்நடைக்கு மனு அளித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுந்தமாடியில் 70 ஆண்டுகாலமாக ஒரு கோடி மதிப்பிலான மூன்று ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் சுமார் 70 ஆண்டு காலமாக ஒரு கோடி மதிப்பிலான மூன்று ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனி ஒருவர் ஆக்கிரமிப்பில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து விழுந்தமாவடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து வட்டாட்சியர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சிஅலுவலர் காவல்துறையினர் தலைமையில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது நிலஅளவையர் நிலத்தை அளவீடு செய்து கல் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலத்தை மீட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்