நாள்: 04.10.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 1.45 மணி முதல் காலை 2.45 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். உற்பத்தி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
திருத்தலம் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனித்திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.
மிதுனம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். திறமைக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் சில அலைச்சல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
சிம்மம்
எதிர்பார்த்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.
கன்னி
வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்கவும். தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
துலாம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
விருச்சிகம்
வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும், அதை சார்ந்த முயற்சிகளும் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.
தனுசு
உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நிறைவான நாள்.
கும்பம்
சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். நுண்கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
மீனம்
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.