நாள்: 03.04.2023 - திங்கள்கிழமை


நல்ல நேரம் :


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை




இராகு :



காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


தாய்வழி உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பயணங்களால் புதிய அனுபவமும், உத்வேகமும் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


மிதுனம்


அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும். பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.


கடகம்


சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தெளிவும் உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


சிம்மம்


உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கன்னி


மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியில் உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விரயங்கள் நிறைந்த நாள்.


துலாம்


வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மனதில் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


விருச்சிகம்


மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகள் வெளிப்படும். குழந்தைகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சோர்வு நீங்கும் நாள்.


தனுசு


வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.


மகரம்


வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பழக்கவழக்கத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்


புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும் தொடர்பும் கிடைக்கும். பொறுமை நிறைந்த நாள்.


மீனம்


வியாபாரம் நிமிர்த்தமான புதிய ஒப்பந்தம் கைகூடும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். மதிப்பு மேம்படும் நாள்.