நாள்: 31.03.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்:
நண்பகல் 12.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
மேஷம்
பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வை நீக்கும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. மதிப்பு நிறைந்த நாள்.
ரிஷபம்
நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி சாதகமாகும். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியம் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
செய்கின்ற தொழிலில் மேன்மையான சூழல் அமையும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
கடகம்
தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும்.
சிம்மம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டும் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய முடிவு எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.
கன்னி
வியாபார பணிகளில் மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.
விருச்சிகம்
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். கல்வி நிமிர்த்தமான பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்.
மகரம்
குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கும்பம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மீனம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.