RasiPalan Today May 31:
நாள்: 31.05.2023 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
மாலை 12.00 மணி முதல் மாலை 1.30 மணி வரை
குளிகை :
மதியம் 10.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
சூலம் - வடக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வேலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷபம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மிதுனம்
புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தாய் வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை பிறக்கும் நாள்.
கடகம்
உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் படிப்படியாக குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.
கன்னி
பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
துலாம்
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நட்பு நிறைந்த நாள்.
விருச்சிகம்
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செல்வத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
தனுசு
எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களால் அனுபவம் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
மகரம்
குடும்ப பெரியோர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். இறைவழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.
கும்பம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். விளையாட்டு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
மீனம்
வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சலனம் நிறைந்த நாள்.