டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நடிகை ரித்திகா சிங் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.


நடிகை ரித்திகா சிங் ஆதரவு:


மல்யுத்த வீர, வீராங்களை தங்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு பல தரப்பிரர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை ரித்திகா சிங் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டிவீட் செய்துள்ளார்.


ரித்திகா சிங் ட்வீட் விவரம்:


”மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் நடத்தப்படுவதை கண்டால் வேதனையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது. அவர்கள் எப்படியான துயர்மிகு மனநிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய கூட முடியவில்லை. உலக அரங்கில் விளையாட்டு வீரர்களான அவர்களுக்கும் மரியாதையும், மதிப்பும் மறுக்கப்படுள்ளது; மனிதாபிமானம் இன்றி நடத்தப்படுகிறார்கள்.


தங்கள் திறமையால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பிரதிபலிப்பவர்களை நாம் மரியாதோடு நடத்த வேண்டும். ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். அவர்களோடு நாம் உடன் நிற்க வேண்டும்.


அவர்களின் குரல்களை ஒடுக்குவது முறையானதல்ல; இது நம்மிடையே புரிதலின்மையே உருவாக்கும். இந்த பிரச்சனை வெகு விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.” என தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




பிரச்சனை என்ன?


சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்க்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று டெல்லி போலீஸ் கூறியதால் ஹரித்துவாருக்கு போராட்டத்தை மாற்றினர். தொடர்ந்து பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பதக்கங்களை கங்கையில் வீச இன்று (30.05.2023) மாலை மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வருகை தந்தன. போராட்டம் நடத்திய வீராங்கனைகள் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிக்காக போராடுபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கொடுமையானது என்ற கருத்துகள் பல தரப்பினரிடமிருந்தும் எழுந்து வருகிறது.


தொடர்ந்து போராடி வரும் வீராங்கனைகளுக்கு உரிய பதில் கிடைக்காததால், வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினோத் போகத் உள்ளிட்டோர் பதக்கங்களுடன் தரையில் அமர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.


5 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு - விவசாயிகள் உறுதி 


iஇந்த பிரச்சனைகளை தீர்க்க 5 நாள் அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டார். விவசாய சங்க தலைவர் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாள் அவகாசம் அளித்துள்ளனர்.