நாள்: 31.05.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாளை சாதகமாக்கிக் கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி எடுப்பீர்கள். உங்கள் மனது அமைதியாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்த இயலும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, ஒரு சாதகமான நாள் உங்கள் முன் இருக்கின்றது. இன்று அமைதியான மனநிலையுடன் காணப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். இன்று மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று சில பொறுப்புகளை உங்களால் செய்ய முடியாமல் போகலாம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் நலன் பெருகும். இன்று பயணங்கள் காணப்படும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்கள் எண்ணங்கள் ஈடேறும். இன்று அதிர்ஷ்டங்களை சந்திப்பீர்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். உங்கள் அணுகுமுறை மூலம் நீங்கள் புதிய தொடர்புகளை பெறுவீர்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாளில் எதிர்பாராத மாற்றங்கள நிகழும். முயற்சிகளை சார்ந்து செயல்படுவது நல்லது.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று அன்பும் ஆர்வமும் நிறைந்திருக்கும். நல்ல பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். விளையாட்டில் நேரத்தை கழியுங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, திறமையான முறையில் செயலாற்ற உங்களுக்கு பொறுமையும் உறுதியும் தேவை.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுய வளர்ச்சிக்காக தொடர்ந்து முயன்றால் இன்று வெற்றிகரமான நாளாக ஆக்கலாம்.
Also Read | June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்