Rasipalan 25 July, 2023: இன்றைய ராசி பலன்


நாள்: 25.07.2023 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எண்ணிய சுபகாரியங்கள் கைகூடி வரும். எதிலும் உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். வர்த்தகப் பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் பக்குவம் பிறக்கும். விவசாய பணிகளில் உதவி கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.


மிதுனம்


கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. வேகத்தை விட விவேகம் சில இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மதிப்பு நிறைந்த நாள்.


கடகம்


கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். பூர்வீக வீட்டினை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.


சிம்மம்


மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சுகம் நிறைந்த நாள்.


கன்னி


செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முதலீடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.


துலாம்


புதியவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பல பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கோபத்தால் சில வாய்ப்புகள் தவறும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக இருக்கவும். அலுவலகம் குறித்த கருத்துகளை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வரவுகள் நிறைந்த நாள்.


விருச்சிகம்


சிறு சிறு விஷயங்களுக்கும் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தொழில் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். விலகி சென்றவர்களை பற்றிய நினைவுகள் தோன்றி மறையும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். அரசு பணிகளில் கவனத்துடன் செயல்படவும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


தனுசு


வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். பரிவு நிறைந்த நாள்.


மகரம்


சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


கும்பம்


வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தனவரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். திறமைகளின் மூலம் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனை நிறைந்த நாள்.


மீனம்


கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.  பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும்.குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளால் அலச்சல்கள் ஏற்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.