நாள்:  20.09.2023 – புதன்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல்  பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


மனதில் சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணியில் நிதானம் வேண்டும். எதிர்பாராத செலவு உண்டாகும். அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலைக் குறைத்துக் கொள்வது நல்லது. சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம்


அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் பொறுமையும், கவனமும் வேண்டும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.


மிதுனம்


பணவரவு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.


கடகம்


சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வருகை உண்டாகும். சிந்தனையில் கவனம் வேண்டும். வாழ்க்கையை மாற்றும் சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சில பணிகளுக்காக அலையும் சூழல் உண்டாகும்.


சிம்மம்


சுபகாரிய விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத காரியங்களில் தொய்வு உண்டாகும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மிக கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.


கன்னி


நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்பிரச்சினை கட்டுக்குள் வரும். லாபம் நிறைந்த நாள்.


துலாம்


பொருளாதார நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல் தீரும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மேன்மை ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


விருச்சிகம்


புதிய முயற்சிகளில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் நடக்கும். வியாபார நிமிர்த்தமான பயணங்களில் மேன்மை உண்டாகும். ஆடம்பரமான விஷயங்களைத் தவிர்க்கவும். வேலைவாய்ப்பு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உங்கள் பணியை மட்டும் பார்ப்பது மிகவும் நல்லது.


தனுசு


ஆடம்பர பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். விளையாட்டுத்தனம், குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும்.


மகரம்


எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் கைகூடும். சொத்து விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கும்பம்


முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உல்லாச பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.


மீனம்


பேச்சுக்களில் கவனம் வேண்டும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.