இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 19, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றம் உண்டாகும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். தன வரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலை அமையும். பேச்சுக்களில் கலைநயம் வெளிப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
கடக ராசி
எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு ஏற்படும். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். வாகன வழியில் சில விரயங்கள் நேரிடலாம். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். தடங்கல் மறையும் நாள்.
கன்னி ராசி
உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வீடு புதுப்பிப்பது சார்ந்த சிந்தனை மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். திடீர் வரவுகள் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புரிதல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம் ராசி
திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்லவும். புத்திரர்களால் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.
தனுசு ராசி
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் பற்றிய புதிய பார்வை ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். மனதிற்கும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.
மகர ராசி
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.
கும்ப ராசி
அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். வரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
மீன ராசி
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.