நாள்: 03.05.2024
கிழமை: வெள்ளி
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 1.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.00 மணி முதல் காலை 9.30 மணி வரை
எமகண்டம்:
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
ரிஷபம்
சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கிடைக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எழுத்து துறைகளில் திருப்பங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
கடகம்
ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் உண்டாகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
கன்னி
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். இன்பம் நிறைந்த நாள்.
துலாம்
தனம் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். சுகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
நினைத்த சில காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். தடங்கல் விலகும் நாள்.
தனுசு
தந்தை வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் விவேகம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். அமைதி நிறைந்த நாள்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணிகளில் துரிதம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.
கும்பம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகளிடத்தில் அதிக உரிமைகளை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மௌனம் காக்கவும். முயற்சி மேம்படும் நாள்.
மீனம்
விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வியாபாரப் போட்டிகளால் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.