நாள்: 25.05.2024 


கிழமை: சனி 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நினைத்த பணிகள் சாதகமாக அமையும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.


ரிஷபம்


பேச்சுக்களில் சற்று விவேகம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


மிதுனம்


பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்போர்க்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர்வு ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிறைவு நிறைந்த நாள்.


கடகம்


திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பத்திரம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதரிகளின் வழியில் சில காரியங்கள் சுமூகமாக முடியும். சாந்தம் வேண்டிய நாள்.


சிம்மம்


குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செய்லபடவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களின் உதவியால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நற்செய்தி கிடைக்கும் நாள்.


கன்னி


முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். உறவினர்களின் வழியில் விரயங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் கைகூடும். அமைதி வேண்டிய நாள்.


துலாம்


மனதில் இருந்துவந்த கவலைகள் விலகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த வருத்தம் நீங்கும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.


விருச்சிகம்:


தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் தெளிவு பிறக்கும். வியாபாரங்களில் எதிர்பார்த்தபடி லாபம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.


தனுசு


மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். குழந்தைகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக முடியும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பணியாளர்களிடத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். பாராட்டு நிறைந்த நாள்.


மகரம்


மனை சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மனதளவில் தேவையற்ற குழப்பம் தோன்றி மறையும். உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். சகப் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.


கும்பம்


எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். உதவி கிடைக்கும் நாள்.


மீனம்


நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப விஷயங்களில் பொறுமை வேண்டும். பணி சார்ந்த திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களால் திடீர் விரயங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.