நாள்: 18.05.2024 


கிழமை: சனிக் கிழமை


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப நபர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். பக்தி நிறைந்த நாள்.


மிதுனம்


கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பாகப் பிரிவினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வாகன மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.


சிம்மம்


தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கன்னி


செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.


துலாம்


எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.


விருச்சிகம்:


திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். குழப்பம் நிறைந்த நாள்.


தனுசு


உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் அமையும். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ஓய்வு வேண்டிய நாள்.


மகரம்


தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


கும்பம்


விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது விரயங்களை தவிர்க்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 


மீனம்


உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சவாலான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.