நாள்: 18.03.2024 - திங்கள்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். கவனம் வேண்டிய நாள்.
ரிஷபம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.
மிதுனம்
உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். மனதளவில் சிறு சிறுர சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மேன்மை நிறைந்த நாள்.
கடகம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஜாமின் தொடர்பான விஷயங்களை தவிர்க்கவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு கைகூடும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பரிசு நிறைந்த நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
துலாம்
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் புதிய பாதை புலப்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
தனுசு
உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
மகரம்
அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
கும்பம்
வெளி உணவுகளை தவிர்க்கவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நாவல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிப்பீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பெரியார்களின் ஆலோசனை கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.