நாள்: 05.06.2024 


கிழமை: புதன்


நல்ல நேரம்:


காலை 11.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சோர்வு விலகும் நாள். 


ரிஷபம்


செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். அலுவலகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சில விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் விவகாரங்களில்  தலையிடாமல் இருக்கவும். புதிய விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். பகை விலகும் நாள். 


மிதுனம்


பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மறைமுகமான சில தடைகள் மூலம் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


கடகம்


செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். பணியிடங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். நட்பு நிறைந்த நாள்.


கன்னி


வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். நட்பு நிறைந்த நாள்.


துலாம்


மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிலும் பொறுமை வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.


விருச்சிகம்:


நினைத்த காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் சற்று குறையும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தெளிவு மேம்படும் நாள்.


தனுசு


நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.


மகரம்


நினைத்த செயல்களில் பொறுமை வேண்டும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாக அமையும். பழைய விவகாரங்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். இனம் புரியாத சிந்தனைகளால் மனதில் சோர்வு ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.


கும்பம்


வருமான உயர்விற்கான சூழல் அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். பணி விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.


மீனம்


திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். தொழில் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். வெற்றி நிறைந்த நாள்.