நாள்: 27.06.2024 


கிழமை: வியாழன்


நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


இராகு:


பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை 


குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ரகசியமான சில செயல்கள் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வுகள் விலகும். நம்பிக்கை மேம்படும் நாள்.


ரிஷபம்


சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். கை தொழிலில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயத்தை அடைவீர்கள். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆதரவாக இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேளாண்மை துறைகளில் இருந்த குழப்பங்கள் மறையும். பாராட்டு நிறைந்த நாள். 


மிதுனம்


கற்றலில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசியல் வட்டங்களில் முக்கியத்துவம் உண்டாகும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். செயல்திறனில் ஒரு விதமான மாற்றங்கள் காணப்படும். மருத்துவ துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். மூத்த சகோதரர்களால் சில விரயங்கள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.


கடகம்


தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தாமதம் நிறைந்த நாள்.


சிம்மம்


காப்பீடு தொடர்பான புரிதல்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய கவலைகள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். வெளிநாட்டு பயணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.  


கன்னி


நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.


துலாம்


தாய்மாமன் வழியில் புரிதல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதி இன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.


விருச்சிகம்:


குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். கலைத்துறைகளில் மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். நிறைவு நிறைந்த நாள். 


தனுசு


உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பாடங்களில் இருந்து குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.


மகரம்


உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றமான சூழல் அமையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களில் தலையிடாமல் இருக்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.


கும்பம்


குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தோற்ற பொழுவில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் பொறுமையை கையாளவும். நேர்மை நிறைந்த நாள்.


மீனம்


தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கையாளவும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.