நாள்: 20.01.2024 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக  சொத்துக்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.


மிதுனம்


சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துகளை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள். 


கடகம்


ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் கைகூடிவரும். சோதனை நிறைந்த நாள்.


சிம்மம்


நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். நட்பு மேம்படும் நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


துலாம்


பழைய பிரச்சனைகள் மீண்டும் தோன்றும். குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள். 


விருச்சிகம்:


விரும்பிய காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பண விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.


தனுசு


தனவரவு அதிகரிக்கும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு சார்ந்த காரியங்களால் அனுகூலம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகள் நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.


மகரம்


எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடிவரும். ஆடம்பர செலவுகளை குறைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். சலனம் நிறைந்த நாள்.


கும்பம்


முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.


மீனம்


செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் இருந்துவந்த தடை விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.