Rasi Palan Today Aug 31: தனுசுக்கு வெற்றி..கடகத்துக்கு வரவு - இன்றைய ராசி பலன்!

Rasi Palan Today, August 31: ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

Continues below advertisement

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே இன்றைய தினத்தில் சந்திரன் கடகத்தில் செல்கிறார். இந்த சமயத்தில் இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

 மேஷ ராசி

 அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே.. நினைத்தது போல நாள் நன்றாகத் தான் செல்லும்.  குறிப்பாக மதியத்திற்கு மேல் சிரமம் இல்லாமல்  காரியங்களை முடிக்கக்கூடும்.   குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.   சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்களின் அறிமுகம் கிட்டும். தொந்தரவு இல்லாமல் நாள்   நகரும்.

 ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி  வாசகர்களே....உங்களுடைய ராசிக்கு  பண வரவு உண்டாகும் நாள்  நாள்பட்ட வியாதிக்கு  மருந்து மூலம்  குணமாகும் யோகம் உண்டு.   உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.  டிஜிட்டல் வழியில் ஆதாயம் உண்டு

  மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  புகழ் கூடும் நாள். உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசும்படியாக உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.  எதிரிகளை இனம் கண்டு பிடிப்பதில்  சற்று கவனம் செலுத்துவீர்கள்.   குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்.

 கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே.... ராசிக்குள் சந்திரன் செல்வதால்  வரவுக்கு மீறின செலவு உண்டு. அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் நினைப்பது  உண்மைதான்.  ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களின் செலவுகளை நீங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும்  வீட்டிற்காக சுபச் செலவுகள் சிலவற்றை மேற்கொள்ளலாம்.   நண்பர்களின் ஆதரவு பெருகும். .  தன வரவும் உண்டு. சற்று அமைதி காப்பது நல்லது...

  சிம்ம ராசி

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு.   குறிப்பாக நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சிறப்பாக முடிப்பீர்கள்  அந்த வகையில் இன்றும்  நல்லபடியாக   மனதிருப்தியாய் வேலையை முடித்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

  கன்னி ராசி

 எவ்வளவு பெரிய போராட்டம் இருந்தாலும்  அதை சுலபமாக கையாளும் சக்தி உடையவர் நீங்கள்.   மற்றவர்களுக்கு எப்படி பெரிய பிரச்சனை இருந்து தப்பிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவீர்கள்.   எந்த ஒரு பெரிய காரியத்தையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் சலனமே இல்லாமல் அமைதியாக இருப்பீர்கள்.  அமைதி காக்க வேண்டிய நாள்.

  துலாம் ராசி

 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  வெற்றியின் நாளாக இன்று இருக்கப் போகிறது.  பெரிய பிரச்சனைகளுக்கு நீங்கள் போய் நின்றாலே போதும் அந்த பிரச்சனை சரியாகிவிடும்.   கடினமான இலக்கையும் சுலபமாக இன்று எட்டி முடிப்பீர்கள்.   குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

 விருச்சக ராசி

 அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே இன்று தன வரவு தாராளமாக இருக்கும்  வங்கியில் சேமிப்பு உயரும்.   வாரா கடன்கள் வந்து சேரலாம்.   கடன் கேட்டு வாங்கி போனவர்கள் வீடு தேடி வந்து கடன்  திரும்ப கொடுத்து விட்டு செல்லலாம்.   வரவு மிகுந்த நாள்.

  தனுசு ராசி

உங்களுடைய ராசிக்கு  சந்திராஷ்டமம் செல்வதால்  ஏதேனும் கவனமாக இருக்க வேண்டும்  மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது.   நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் கூட தேடி வந்து வம்பு இழுப்பார்கள் சிலர்  கவலைப்பட வேண்டாம் அமைதியாக நாளை கடத்திச் சொல்லுங்கள்  முக்கியமான நிகழ்ச்சிகளை தள்ளி போடுங்கள்  வெற்றி உங்கள் பக்கம் உண்டு.

மகர ராசி

அன்பார்ந்த மகர ராசி வாசிகர்களே, உங்களுடைய ராசிக்கு.  சரிபாதியான நாள் என்று சொல்ல வேண்டும்   கோபத்தை கட்டுப்படுவீர்கள்.   பெரிதாக யாரிடமும் சண்டை இட வேண்டாம். .  உங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கும் இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக வெளியில் சொல்ல வேண்டாம்.   நீங்கள் நல்லது சொல்லும் இடத்தில்  மற்றவர்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம்.   பொறுமை காக்க வேண்டிய நாள்.

  கும்ப ராசி

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே காலையிலிருந்து மனம் நிம்மதியாக செல்லும்.   பழைய நினைவுகளில் சற்று மூழ்கி இருப்பீர்கள்.   வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனை இருக்கும்.   கடந்து வந்து பாதையை பற்றி சுகமான நினைவுகளை அசைபோட ஏற்ற நாள் இது.  மனதிற்கு இனிய சில சம்பவங்கள் நடைபெறும்.

  மீன ராசி

 அன்பார்ந்த மீன ராசி மாற்றங்களை புரிந்து கொள்ள  நேரம் இது.  தன வருவாய் பெருக்குவதற்கு என்ன வழி என்று யோசிப்பீர்கள்  மற்றவர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.   உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.   நினைத்ததை எட்டுபிடிக்க சில மயில் தூரமே இருப்பதால்  தயங்காமல் ஓடிக் கொண்டே இருங்கள்.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola