✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rasi Palan Today, August 14: விருச்சிகத்துக்கு அதிர்ஷ்டம், தனுசுக்கு நன்மை - உங்கள் ராசிக்கான பலன்?

செல்வகுமார்   |  14 Aug 2024 06:09 AM (IST)

Rasi Palan Today, August 14: ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 14, 2024:

  அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் விருச்சகத்தில் சந்திரன் பயணம் செய்கிறார்  இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

  மேஷ ராசி

  உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால்... பேச வேண்டிய இடத்தில் மட்டும் பேசுங்கள்.... நீங்கள் எதுவும் செய்யாமலேயே உங்களை பற்றி மற்றவர்கள் குறை கூறுவார்கள்.... சில சமயங்களின் நீங்கள் நல்லது சொல்ல போய் அது மற்றவர்கள் தீமையாக எடுத்துகொள்ள கூடும்.... வம்புக்கு என்று யாராவது எதையாவது பேசினால் கூட அதை பற்றி கவலை படாமல் கடந்து செல்வது நல்லது.... 

  ரிஷப ராசி

  அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே இன்று தனவரவு  பெருகக்கூடிய நாள்.   மற்றவர் இடத்தில் பணம் கேட்டால் உடனடியாக கிடைக்கும்.  யாரிடமும் மனம் விட்டு பேசுதல்  சற்று ஏமாற்றத்தை கொடுக்கலாம்.   குடும்பத்தில்  சுப காரியங்கள் நடந்தேறும்.

  மிதுன ராசி

  எவ்வளவு முயன்றாலும்  முன்னேற முடியவில்லை என்று  இயங்கும் மிதுன ராசி அன்பர்களே என்று நீங்கள் செய்யும் காரியங்கள் படு வேகமாக இருக்கும்.   சாமியோ சித புத்தி அதிகரிக்கும்.  சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.   உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.

  கடக ராசி

  அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள்.   மற்றவர்கள் உங்களிடத்தில்  கடன் கேட்டால்.  சற்று யோசித்து முடிவு எடுங்கள்.  கொடுத்தது  திரும்ப வராமல் கூட போகலாம்.  திருப்பங்கள் நிறைந்த தினம்.

  சிம்ம ராசி

 மனம் சுறுசுறுப்புடன் இருக்கும்.   மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள்.   அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று  உங்களுடைய நட்சத்திரத்திற்கு  விசேஷ பூஜை செய்யலாம்.   அடுத்தவர்கள் உங்களைப் பற்றி அருமையாக பேசுவார்கள்.  நிலம், மனை போன்றவை தொடர்பான காரியங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.

  கன்னி ராசி

  அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே  அதிகப்படியான அலைச்சல் இருக்கும்  இவ்வளவு நாள் எங்கு போயிருந்தீர்கள் என்று மற்றவர்கள் உங்களை தேடும் அளவிற்கு வேலையில்  மிகவும் பிசியாக இருப்பீர்கள்.  உடல் உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

  துலாம் ராசி

  அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே இன்றைய நாள் உங்களுக்கு வெற்றியின் நாள்.   எவ்வளவு பெரிய கடினமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடிக்க போகிறீர்கள்.     உறவினர்களின் வருகை இருக்கும்.   எதற்காகவும் உங்களுடைய கோபத்தை யாரிடமும் காட்ட வேண்டாம்.  உதவிகள் கிடைக்கும் நாள்.

  விருச்சிக ராசி

 அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திரன் ராசியிலேயே பயணிக்கிறார்.... அதுவும் மதியத்திற்கு மேல் கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார்.... ஒரு வேலைக்கு இரண்டு வேலை செய்ய வேண்டி வரலாம்.... சிலருக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்க வாய்ப்பு உண்டு...

  தனுசு ராசி

  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் நாள்.   எவ்வளவு பெரிய நோய்களாக இருந்தாலும் அது மருத்துவத்தின் மூலம் உடனே குணமாகும்.  எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.   உங்களுக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை சிறப்பாக முடிப்பீர்கள்.   நன்மை மிகுந்த நாள்.

  மகர ராசி

  அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  பொன்னான நாள்  இருப்பினும்  எதிலும் பெரிதாக தலையிடாமல் அமைதியாக நாளை நகர்த்த பார்ப்பீர்கள்.   நண்பர்கள் உங்களைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டால் கூட ஒன்றும் இல்லை என்று  சொல்லும் அளவிற்கு அமைதி காக்கும் நாள்.   குறிப்பாக மனதில் இனம் புரியாத ஏதோ ஒரு படபடப்பு இருந்து கொண்டே இருக்கும்.   

  கும்ப ராசி

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே வரவு பத்து ரூபாய் இருந்தால் செலவு 30 ரூபாய் இருக்கும்  கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்ற வார்த்தைக்கேட்ப  புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.   மற்றவர்கள் உங்களை பார்த்து வேர்க்கும் அளவிற்கு உங்களுடைய வேலை இருக்கும்.   மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.   யாரேனும்  குதர்க்கமாக பேசினால் கூட தலையிட வேண்டாம்.

  மீன ராசி

  அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  இருள் விலகி ஒளி பெருகும் நாள்  மனதில் ஒரு படபடப்பு பயம் இருக்கலாம்  மறைமுகமான எதிரிகளால் உங்களுக்கு மனதில் சஞ்சலம் உண்டாகலாம்  கவலை வேண்டாம் கடவுள் இருப்பார்  துணைக்கு.   எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். 

Published at: 14 Aug 2024 06:09 AM (IST)
Tags: horoscope RasiPalan August rasi palan today Astrology Today Rasipalan RasiPalan Today
  • முகப்பு
  • ஜோதிடம்
  • Rasi Palan Today, August 14: விருச்சிகத்துக்கு அதிர்ஷ்டம், தனுசுக்கு நன்மை - உங்கள் ராசிக்கான பலன்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.